மதுரையில் பாஜகவின் ஒரே கவுன்சிலர்.. மாவட்டத் தலைவர் மீது பெண் நிர்வாகி பரபர புகார்! திடீர் ராஜினாமா
மதுரை: மாவட்டத் தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக மாவட்ட துணை தலைவர் பதவியை விட்டே ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார் அக்கட்சியின் கவுன்சிலர் பூமா. என்ன காரணம்? விரிவாக பார்ப்போம்.
மதுரை மாநகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் 86 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலரானவர் பூமா. மதுரை மாநகராட்சியின் ஒரே ஒரு பாஜக கவுன்சிலரான இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கட்சிக்கு உள்ளேயும் வெளியிலும் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பாஜகவின் மதுரை மாவட்ட துணை தலைவராக நியமனம் செய்யப்பட்ட இவர், தற்போது மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். இந்த நிலையில் மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கும் கவுன்சிலர் பூமா, மாவட்டத் தலைவருக்கே தன்னுடைய கடிதத்தை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "தாங்கள் என்னை மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட துணை தலைவராக நியமித்ததை அறிவேன். மகிழ்ச்சியே! ஆனால் தங்களின் செயல்பாடுகளும் சுயநலபோக்கும் கட்சியை வளர்ச்சிக்கு பாதைக்கு அழைத்து செல்லாமல். அழிவு பாதைக்கு அழைத்து செல்வதையும் அறிவேன்.
மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களும், மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களும் செய்யும் சீரிய செயல்பாட்டாலும், உண்மையான போக்காலும் தமிழகத்தில் தலை நிமிர்ந்து வரும் பாஜகவை, தங்களை போல பணியாற்றும் ஒரு சில சுயநலவாதிகளின் செயல்களால் பாஜக வீழ்ச்சி பாதையில் செல்கிறது என்பதையும் நான் அறிவேன்.
அதற்கு உதாரணம் மதுரை மாநகரே. சுயநலத்தோடும், கட்சி விசுவாசமின்றி செயல்படும் தங்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது கட்சிக்கு நான் செய்யும் இழி செயலே ஆகும். ஆகவே தாங்கள் அறிவித்த மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொள்கின்றேன். தங்களுடன் இணைந்து இனி செயலாற்ற மனமில்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கட்சியின் அங்கீகாரத்தோடும், மாநில தலைவரின் ஆதரவோடும். நான் வெற்றி பெற்ற 86 வது மாமன்ற உறுப்பினர் பதவியை சரியான முறையில் பயன்படுத்தி, மக்கள் சேவையாற்றி, கட்சிக்கு முழு விசுவாசத்துடனும், கட்சிக்கு அவபெயரின்றி, நற்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவேன் என்பதையும், தங்களிடம் மாவட்ட தலைவர் என்ற முறையில் தெரிவித்து உறுதி கூறுகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளேன்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் சுசீந்திரன் தனியார் ஊடகத்திடம் தெரிவிக்கையில், "25 ஆண்டுகளாக நான் கட்சியில் உள்ளேன். என்னை பற்றி யாருமே புகாரளித்தது கிடையாது. மாவட்ட பொதுச்செயலாளர் பதவியை கவுன்சிலர் பூமா எதிர்பார்த்தார். ஆனால், அனைத்து சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் துணைத் தலைவர் பதவி வழங்கினோம். அதை ஏற்க முடியாமல் அவதூறு பரப்புகிறார். அவர் வேறு எங்கோ செல்ல முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது." என்றார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications