மணமணக்கும் மதுரையில்.. "அந்த" இடத்தில்தான் மத்திய சிறைச்சாலை வரப்போகுதா? ஹைகோர்ட்டே சொல்லிருச்சே
மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், '6 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் புழல், புழல்-2, மதுரை, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன. சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட "சிறை அங்காடி"கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சிறைவாசிகள்: அதுபோல் சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பு, நெசவு, விவசாய உற்பத்தி என பல பணிகளை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள். இதனுடன் சிறைக்கைதிகள் மன அழுத்தம் நீங்க ஆலோசனைகளும், மனநல போதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நம்மிடையே பேசிய சிறைத்துறையினர், "தமிழகத்தில் புழல், புழல்-2, மதுரை, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன.
சிறைக்கைதிகள்: சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட 'சிறை அங்காடி'கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதுபோல் சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பு, நெசவு, விவசாய உற்பத்தி என பல பணிகளை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள்.
இதனுடன் சிறைக்கைதிகள் மன அழுத்தம் நீங்க ஆலோசனைகளும், மனநல போதனை வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சிறைவாசிகள் மன அழுத்தம் நீங்கி நல்வழியில் மனதைச் செலுத்தக்கூடிய புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை சிறைத்துறை தொடங்கியுள்ளது.
மையப்பகுதி: இதில், மதுரை மத்திய சிறைச்சாலையை பொறுத்தவரை, நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட ஆண், பெண் சிறை கைதிகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது இந்த சிறையில், 2379 கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் பெண் சிறை கைதிகளுக்கான தனி வளாகமும் உள்ளது.
எனவே, மதுரை அரசரடி அருகே உள்ள இந்த சிறையில் இட நெருக்கடியாக உள்ளது.. அத்துடன், சிறையின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. அதனால்தான், இந்த சிறையை மதுரையின் புறநகர் பகுதிகளான இடையபட்டி, சிறுமலை அடிவாரத்தின் பகுதிக்கு இடமாற்றம் செய்யலாமா என அரசு ஆய்வு செய்தது. ஆனால் அதற்கு ஆரம்பத்திலேயே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர்..
சிறைச்சாலை: எனினும், சிறையை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. சிறைச்சாலைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து விரைவாக புதிய வளாகத்தை அமைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது மதுரை மத்திய சிறைச்சாலையை இடமாற்றம் செய்வது அவசியமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மேலூர் அருகே சிறைக்கான மாற்றிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது... விரைவில் பணிகள் துவங்கும் என்று பதிலளித்தார்.
நீதிபதிகள் உத்தரவு: இதனையடுத்து, இடமாற்றம் செய்ய அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில், 6 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். மேலூர் தெற்கு தெரு அருகே செம்பூரில் 170 ஏக்கர் இடம் மதுரை மத்திய சிறைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. எனவே, 6 மாதத்துக்குள் புதிய சிறைக்கான கட்டுமான பணிகள் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான இடையபட்டியில் 100 ஏக்கர் பரப்பளவில் மதுரை மத்திய சிறை அமைக்கப்பட இருப்பதாக அரசு அறிக்கை வெளியிட்டது.. ஆனால், பொதுமக்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள், இடையபட்டி அரிய வகை உயிரினங்கள் வாழும் பகுதி என்றும், அங்கு சிறை அமைந்தால் பல்லுயிர்ச் சூழல் தடைபடும் என்றும் புகார் தெரிவித்து சிறைச்சாலை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்..
அதனைத் தொடர்ந்து சிறுமலை பகுதிக்கு மாற்றலாம் என்று என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, இதற்கும் அங்கிருந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் சிறை அமைய எதிர்ப்பை தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
-
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications