மதுரை சித்திரை திருவிழா இன்று துவக்கம்.. விழாக்கோலம் பூண்டது கோவில்களின் நகரம்.. குவியும் பக்தர்கள்
மதுரை: மதுரையில் உலகப்பிரசித்த பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள், சுவாமி சன்னிதி முன் கொடியேற்றம் நடக்கிறது. சித்திரைத் திருவிழா துவங்குவதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 8-ந் தேதி நடைபெறும்; இதனைத் தொடர்ந்து மே 11-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பார்வதி தேவியின் அவதாரமான மீனாட்சி, மதுரை பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவா்களை போரில் வென்று, கடைசியாக சிவபெருமானை போருக்கு அழைத்து பின்னர் அவரையே மணம் புரிந்தார்.

மதுரையை ஆண்ட மகாராணிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவை பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், சித்திரை திருவிழா இன்று அதாவது 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சுவாமி சன்னதி
காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். மே 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 7ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ம் தேதி நடக்கிறது. மே 9ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து மே 10ம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
எதிர்சேவை
11-ந்தேதி மூன்று மாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடக்கிறது. 12-ந்தேதி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, லட்சக்கணக்கான பக்தர்களின் அன்பான வரவேற்புக்கு மத்தியில், கள்ளழகர் தங்கக்குதிரையில் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்குகிறார். ராமராயர் மண்டபத்தில் அவரை குளிர்விக்க தீர்த்தீர்த்தவாரியும் நடக்கிறது.
அடுத்த நாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பின்னர் தசாவதாரங்களில் காட்சி அளிக்கிறார். பூப்பல்லக்கில் தல்லாகுளததில் பவனி வருவார். 15-ந்தேதி மலைக்கு புறப்படுகிறார்.
இணைப்பு திருவிழா
இந்த திருவிழாவின் இணைப்பாக நடைபெறும் அழகர் கோயில் திருவிழா மே 8ம் தேதி தொடங்குகிறது. மே 10ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். மே 11ம் தேதி அழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
மதுரை விழாக்கோலம்
மே 12ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது. மே 13ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம், மே 14ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்தல் திருவிளையாடல் நடைபெறும். சித்திரைத் திருவிழா துவங்குவதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு திரண்டு வந்து இந்த சித்திரை திருவிழாவை கொண்டாடுவது வழக்கமாகும்.. வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள். எனவே, சித்திரைத் திருவிழா2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது..
தமிழக அரசு நம்பிக்கை
இதில் அமைச்சர்கள் பி. மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. அரவிந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு கியூஆர் கோடுடன் ஆர்எப்ஐடி பாஸ் வழங்கப்படும். கோயிலுக்கு வெளியே முந்தைய சித்திரை திருவிழாவின் அனுபவங்கள் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்படும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
வைகை தண்ணீர்
அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டுகளை விடவும் இந்த வருடம் விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படும் என்றும் இதுவரையிலான கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சித்திரைத் திருவிழாவுக்காக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications