மதுரை சித்திரை திருவிழா.. கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்! குவிந்த பக்தர்கள்
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இன்று சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் மிதுன லக்ணத்தில் நடைபெறுகிறது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். முன்னதாக திருமண வைபவ சடங்குகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி 20 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடந்தது.. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தையொட்டி இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள்.. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது..

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படும் மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது.
மதுரை சித்திரை திருவிழாவின் 9ம் நாளான நேற்று அம்மனின் திக்கு விஜயம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் தடாதகை பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று காலை மீனாட்சி-சொக்கர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மிதுன லக்ணத்தில் திருக்கல்யாணம் நடந்தது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். தங்கை மீனாட்சியை சொக்கநாத பெருமானுக்கு பவளக்கனியாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார். மீனாட்சிக்கு தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி, பச்சை கல் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
இதேபோன்று திருக்கல்யாணத்தையொட்டி சுந்தரேசுவர் பெருமானுக்கு கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைக்கப்பட்டது. கோயில் வடக்கு மேல ஆடி வீதி சந்திப்பில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக திருமண வைபவ சடங்குகள் நடைபெற்று வருகிறது. கன்னி ஊஞ்சல் ஆடும் நிகழ்வு நடைபெற்றது. திருமண சடங்கான கன்னி ஊஞ்சல் ஆடும் நிகழ்வில், முத்துராமய்யர் மண்டபத்தில் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர்.
இதேபோன்று திருக்கல்யாண மேடை 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 10 டன் வண்ண மலர்கள் மற்றும் 500 கிலோ பழங்கள் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டது. மலர்களை பொறுத்தவரை மதுரை மல்லிகை, திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாசனை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications