பாஜக செயலாளர் எஸ்ஜி சூர்யாவுக்கு ஜாமீன்! மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு! இன்று என்ன நடந்தது?
மதுரை: மதுரை எம்பி சு வெங்கடேசனை விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவு செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக செயலாளர் எஸ்ஜி சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
தமிழ்நாடு பாஜக மாநில செயலாளராக இருப்பவர் எஸ்ஜி சூர்யா. மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்ஜி சூர்யாவை கைது செய்தனர். சென்னை திநகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மதுரை போலீசார் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை கடந்த 16 ம் தேதி நள்ளிரவில் நடந்தது. இதையடுத்து பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து எஸ்ஜி சூர்யா மதுரை கொண்டு வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுது்து எஸ்ஜி சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து எஸ்ஜி சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தான் எஸ்ஜி சூர்யா சார்பில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி டீலா பானு விசாரித்த நிலையில் எஸ்ஜி சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications