இருக்கிறதை கட்டுங்கம்மா! டாக்டர் சரவணன் காட்டிய தாராளம்! 2 கிலோ தைராய்டு கட்டி உடனே அகற்றம்!
மதுரை: 2 கிலோ எடை கொண்ட தைராய்டு கட்டியால் அவதிப்பட்ட மூதாட்டிக்கு, கட்டணத்தை பற்றி கருத்தில் கொள்ளாமல் இருப்பதை கட்டுமாறு கூறி உடனடியாக தனது டீம் மூலம் அறுவைச் சிகிச்சை நடத்தியிருக்கிறார் டாக்டர் சரவணன்.
அண்மையில் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன், அரசியல் பணிகளோடு தனது மருத்துவப் பணிகளையும் தொடர்ந்து வருகிறார்.
வெளியூர்கள் செல்லாமல் மதுரையில் இருந்தார் என்றால் நாள் தவறாமல் தனது சரவணா மருத்துவமனைக்கு விசிட் அடிப்பதோடு நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் மூதாட்டி ஒருவருக்கு 2 கிலோ எடை கொண்ட தைராய்டு கட்டியை தனது மருத்துவர்கள் குழு மூலம் அகற்ற வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது இந்திரா என்ற மூதாட்டிக்கு தைராய்டு பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஆரம்பத்தில் தொண்டை வலி, கழுத்து வலி என நினைத்த அவர் வலி நிவாரண மாத்திரிகளை உட்கொண்டு சமாளித்திருக்கிறார்.
இதனிடையே மதுரையில் உள்ள டாக்டர் சரவணன் மருத்துவமனையில் மூதாட்டி இந்திராவுக்கு நடத்திய பரிசோதனையில், தைராய்டு கட்டி பெரியளவில் வளர்ந்திருப்பதும் பல ஆண்டுகளாக அவர் அதை அவர் கவனிக்காமல் விட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து அந்த மூதாட்டியிடம் அறுவைச் சிகிச்சை பற்றி எடுத்துக்கூறப்பட்டிருக்கிறது. செலவை நினைத்து இந்திரா தயங்கிய நிலையில், காசை பற்றி கவலைப்படாதீங்கம்மா, இருக்கிறதை கட்டுங்க பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய சரவணன் உடனடியாக ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
தைராய்டு பற்றி கிராமபுற மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றும் தொண்டை வலி, கழுத்து வலி என நினைத்து வலி மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ள சரவணன், தைராய்டை கவனிக்காமல் விட்டால் புற்றுநோயாக மாறி உயிருக்கே ஆபத்தாக கூட மாறலாம் என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications