பழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி
மதுரை பைனான்சியர் ராஜா கொல்லப்பட்டதன் பின்னணி வெளியாகி உள்ளது
Recommended Video
மதுரை: பழிக்கு பழி வாங்கவே, பைனான்சியர் ராஜாவை.. ஓட ஓட வெட்டி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேவல் சண்டையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொடூர கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
மதுரை கே.புதூர் ராம வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 47 வயது. திமுக பிரமுகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்.. வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இதை தவிர, சேவல் சண்டையில் நிறைய ஆர்வம் உள்ளவர். இதனால் சுற்றுவட்டாரத்தில் ராஜா என்றால் ரொம்ப பிரபலம்.

கும்பல்
இவர் நேற்று முன்தினம் இரவு ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்று, மது குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து கொண்டது. ராஜாவை நாலாபுறமும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

வீடியோ
இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பிணமானார். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து கே.புதூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது
எதனால் இந்த கொலை நடந்தது என்று உடனடியாக தெரியாமல் இருந்த நிலையில், இக்கொலை தொடர்பாக மதுரை, புதூர் ராம்வர்மா நகரைச் சேர்ந்த நிஜாம்முகைதீன், கார்த்திக் (எ) குட்டை கார்த்திக், தவ்பீக், ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. விசாரணையில், இந்த கொலை பழிக்குப்பழியாகவே நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்ரீதர்
கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே தகராறும், வாக்குவாதமும் நடந்தது. இதில், ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஸ்ரீதர் தரப்பினர் ராஜாவை பழி வாங்கி உள்ளனர். கொலையான ஸ்ரீதரின் நண்பரான கார்த்திக் (எ) குட்டை கார்த்திக் உள்ளிட்ட சிலர்தான் ராஜாவை கொன்றுள்ளனர். இதனால் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

வாக்குமூலம்
இதை பற்றி கைதானவர்கள் சொல்லும்போது, "ஒரு வாரமாகவே ராஜாவை வீட்டிலும் அவர் கடையிலும், போகிற இடமெல்லாம் ஃபாலோ செய்தோம். அப்பறம்தான் கடந்த 21-ம் தேதி நைட் கொலை செய்தோம்" என்றனர். ஆனால் இந்த கொலையில், முன்விரோதம் மட்டும்தான் காரணமா அல்லது கொடுக்கல் வாங்கலில் இந்த கொலை நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications