மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு.. முன்னாள் டிஎஸ்பிக்கு 5 ஆண்டு சிறை
மதுரை: மதுரையில் தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கில் முன்னாள் டிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை மதுரை தினகரன் அலுவலகம் வெளியிட்டது. இதில் ஸ்டாலின் முதலிடத்திலும், அழகிரி கடைசி இடத்திலும் இருந்தனர். இதனால் அழகிரி ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர்.

உடனே தினகரன் அலுவலகத்துக்கு சென்று அங்கு தீவைத்து கொளுத்தினர். அதில் அங்கு பணியில் இருந்த கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் உடல் கருகி பலியாகினர். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.
இதுதொடர்பாக அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் மாவட்ட நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதுபோல் சம்பவம் நடந்தபோது பாதுகாப்பு பணியில் இருந்த அப்போதைய டிஎஸ்பி ராஜாராம் தனது கடமையை செய்ய தவறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அதில் முன்னாள் டிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications