நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்களுக்கு பத்திர பதிவுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டங்ககளின் பத்திரப் பதிவுக்குத் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்து இருக்கிறது.
மதுரை: தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டங்களின் பத்திரப் பதிவுக்குத் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்து இருக்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, மதுரையை சேர்ந்த, அருள்நிதி, முத்துக்குமார், ரமேஷ் போன்ற வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி ராஜா அமர்வு, 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

அதன்பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர்களுக்கு நோட்டிஸ் அனுப்பட்டது. அதை ஏற்று கடந்த 11ம் தேதி ஐந்து கலெக்டரும் நேரில் ஆஜரானார்கள்.
நீர்நிலைகளில் எப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, அதன் விவரம் என்ன என்று அப்போது நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டத்தில் வண்டியூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பனையூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இன்று இதை விசாரித்த ஹைகோர்ட் கிளை, 5 மாவட்டங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதுதவிர பல முக்கியமான உத்தரவுகளையும் ஹைகோர்ட் கிளை பிறப்பித்தது.
தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்களின் பத்திரப் பதிவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு பட்டா வழங்கவும் ஹைகோர்ட் அதிரடி தடை விதித்து இருக்கிறது.
பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு இதுகுறித்து உரிய சுற்றறிக்கையை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முக்கியமாக கழிவு நீர்க் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கலக்கவும் தடை விதித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications