குழந்தை பெற வேண்டும்.. கணவருக்கு 21 நாள் பரோல் கேட்ட பெண்.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போட்ட உத்தரவு
மதுரை: 3 பேரை கொன்றுவிட்டு ஒருவர் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தனது கணவர் மூலம் குழந்தை பெற விரும்புவதாகவும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்காக 21 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் இருப்பவர் முத்துமணி. இவர் 3 பேரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் முத்துமணி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் முத்துமணியின் மனைவி குழந்தை பெற்று கொள்ள விரும்பினார். கணவர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் குழந்தை பெற்று கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் தனது கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்று கொள்ள விரும்புகிறேன். இதனால் தனது கணவருக்கு 21 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று முத்துமணி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அரசு தரப்பில் ஆயுள் கைதிக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆயுள் கைதிக்கு பரோல் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து நீதிமன்றம் முத்துமணியின் மனைவி தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும் அதற்கான காரணத்தையும் நீதிமன்றம் தெரிவித்தது. மூன்று பேரை கொன்ற குற்றத்திற்காக ஆள் தண்டனை அனுபவித்து வுரும் ஒருவருக்கு குழந்தை பிறந்து வளரும்போது அது சமூகத்தில் பிரச்சனையை எதிர்கெள்ளும் ஆயுள் தண்டனை பெற்ற நபரின் குழந்தை என்ற பெயரை பெறும்.
சிறை விதிகளின்படி (Tamil Nadu Suspension of Sentence Rules, 1982) பரோல் என்பது கைதிக்கான சலுகை தானே தவிர உரிமை இல்லை. அதிலும் கருத்தரிப்பு சிகிச்சைக்காக விடுப்பு வழங்க அந்த விதிகளில் இடமில்லை.
சிறைச்சாலையில் கைதிகளைச் சீர்திருத்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்வது இல்லை.
மேலும் குழந்தை பெற விரும்பும் தாயின் விருப்பத்தை மட்டுமே இங்கு கருத்தில் கொள்ள முடியாது. பிறக்கப்போகும் குழந்தையின் நலன் மற்றும் அது எதிர்கொள்ளவிருக்கும் சமூகச் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications