வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைபடுத்துக.. நாம் தமிழர் கட்சி பேரணிக்கு கோர்ட் அனுமதி மறுப்பு!
நாம் தமிழர் கட்சியின் பேரணிக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்துவது தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் வராது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையே பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின. வட மாநில தொழிலாளர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பாஜக நிர்வாகி பொய்யாக பதிவிட்ட சமூக வலைதள பதிவுகள் வேகமாக பகிரப்பட்டன.

வட மாநில தொழிலாளர்கள்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வந்த பீகார் குழு, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. அதேபோல் பொய்யாக செய்திகள் பகிர்ந்த பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

சீமான் கருத்து
இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் வருகையை முறைப்படுத்த வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு, நுழைவுச் சீட்டு வழங்க வேண்டும். வட மாநிலத்தவர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் அதிகாரம்
இதுமட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக அனுமதி கோரப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்துவது தமிழ்நாடு அரசின் அதிகாரத்தின் கீழ் வராது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மனு தள்ளுபடி
அதேபோல் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பேரணிக்கு அனுதி வழங்க கூடாது என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications