ஒரே பரபரப்பு.. 17 வருடங்கள் கழித்து நிரபராதி என தாய்க்கு கிடைத்த தீர்ப்பு.. கொலை வழக்கில் அதிரடி
17 வருடங்களுக்கு பிறகு பெண் ஒருவருக்கு நிரபராதி என தீர்ப்பு கிடைத்துள்ளது
மதுரை: ஒன்றரை வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய்க்கு, 17 வருடங்கள் கழித்து நிரபராதி என்று தீர்ப்பு கிடைத்துள்ளது.. இந்த வழக்கில் சின்ன சின்ன விஷயங்களை கூட சரியாக விசாரிக்கவில்லை என்று மதுரை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ்... இவரது மனைவி சகுந்தலா.. 49 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர்.. இதில் ஒரு மகளுக்கு ஒன்றரை வயது..!
குடும்ப பிரச்சினை காரணமாக, தம்பதிக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது... இதனால் சகுந்தலா கணவரிடம் கோபித்துக்கொண்டு 2002-ல் அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்..

பெண் குழந்தை
ஆனால் மறுநாளே அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது... இதையடுத்து, குழந்தையை கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசியதாக சகுந்தலாவை போலீஸார் கைது செய்தனர்.. இந்த வழக்கை திருச்சி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது.. இறுதியில் சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது.

ஜாமீன்
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி, கடந்த 2014-ல் சகுந்தலா ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்... ஆனால் அது தள்ளுபடியாகிவிட்டது.. பிறகு, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்... இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், சகுந்தலாவுக்கு ஜாமீன் அளித்து, அவர் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

வழக்கு
அந்த வழக்குதான் இன்றைக்கு மதுரை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சகுந்தலாவின் வழக்கறிஞர் வாதாடும்போது, "சகுந்தலா தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.. சாட்சிகளின் தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது..

போஸ்ட் மார்ட்டம்
போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில், குழந்தையின் குடல் மற்றும் நுரையீரலில் தண்ணீர் இல்லை... கண் மூடிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனால் குழந்தை இறந்த பிறகே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. சகுந்தலா தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு தனியாகத்தான் சென்றுள்ளார்... குழந்தையை அழைத்து செல்லவில்லை. அதனால் சகுந்தலாவின் தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

சாட்சிகள்
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சின்ன சின்ன சம்பவங்கள்தான்.. ஆனால், அதையும் கூட சரியாக விசாரிக்கப்படவில்லை. சாட்சிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.. அதனால், சகுந்தலாவுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.. அவரிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால் திருப்பி ஒப்படைக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தனர்..

ஜாமீன்
17 வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு, சகுந்தலாவுக்கு இந்த ஜாமீனை வழங்கி உள்ளது.. அத்துடன் அவர் மீதான வழக்கை மறுபடியும் விசாரிக்க ஹைகோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... சரியாக நிரூபிக்கப்படாத குற்ற வழக்கில் 17 வருடங்களாக தண்டனை அனுபவித்த சகுந்தலா, தொடர்ந்து நடத்திய தன்னுடைய சட்டபோராட்டத்தினால் நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மதுரை ஹைகோர்ட் வழங்கிய மிக முக்கிய தீர்ப்புகளில், ஒன்றாக இந்த சகுந்தலா வழக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications