ஆஸி போல்.. இனி இந்திய குழந்தைகளுக்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை? மதுரை ஹைகோர்ட் பரிந்துரை
மதுரை: ஆஸ்திரேலியாவில் கடந்த 10ம் தேதி முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். சட்டம் வரும் வரை குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மதுரை உயர்நீதிமன்ற கிளை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இதனால் இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா பரவலின்போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் சிறுவர், சிறுமிகள் அனைவரும் ஸ்மார்ட்போன்கள், ஐபோன்களை பயன்படுத்த தொடங்கினர். இதனை தற்போது வாடிக்கையாக மாற்றிவிட்டனர்.

சிறுவர், சிறுமிகள் பலரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்பட பல சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகி்ன்றனர். இந்நிலையில் தான் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எஸ் விஜயகுமார் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், ‛‛சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு ஆபாசமான வீடியோக்கள் எளிதில் கிடைக்கின்றன. இது பெரும் பிரச்சனையாக உள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான 'சாப்ட்வேர்' பயன்படுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலர்கள், இன்டர்நெட் சர்வீசஸ் புரோவைடர் சங்கத்தின் செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை தடுக்க வழிகள் உள்ளன. இருப்பினும் ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய சாப்ட்வேர் அவசியம் தேவைப்படுகிறது. இதுபோன்ற அருவருப்பான காட்சிகளை பார்ப்பதும், தவிர்ப்பதும் அவரவர் விருப்பம் மற்றும் உரிமை சார்ந்ததாக இருந்தாலும் கூட குழந்தைகள் பார்ப்பது என்பது ஆபத்து.
இதனால் ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோன்ற தடையை மத்திய அரசும் கொண்டு வரவேண்டும். ஆஸ்திரேலியாவை நடைமுறையில் உள்ளது போல் ஒரு சட்டத்தை இங்கும் இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, அதை முழு மனதுடன் செயல்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதுவரை இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர். இதனால் நம் நாட்டிலும் ஆஸ்திரேலியாவை போல் சமூக வலைதளங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 10ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா பெற்றது. இந்த தடை உத்தரவுக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலியாவை பின்பற்றி இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications