மதுரையே மிரண்டுடுச்சு.. ஆண்ட்டியையும் விடல, பாட்டியையும் விடல.. 19 வயசின் "காதல் வெறி".. அட ஆண்டவா
மதுரை: 19 வயது மாணவர், 2 பேரை கழுத்து அறுத்து கொன்றுள்ளார்.. இந்த இரட்டை கொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?
மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியை சேர்ந்தவர் குணசீலன்.. 19 வயதாகிறது.. மதுரை எல்லீஸ் நகர் போடி லையன் பகுதியில் இவரது பாட்டி மயிலம்மாள் வசித்து வருகிறார்..

பாட்டியுடன் தாத்தாவும், அவரது மகள் அழகுப்பிரியாவும் ஒரே வீட்டிலேயே வசித்து வருகிறார்கள்.. மதுரையில் தனியார் காலேஜ் ஒன்றில் பி.பார்ம் படிக்க நேர்ந்ததால், பாட்டி வீட்டிலேயே தங்கியிருந்து காலேஜூக்கு சென்று வந்தார் குணசீலன்.. இப்போதுதான் முதல்வருடம் படித்து வருகிறார்.
இவரது காலேஜில் தன்னுடன் படிக்கும் பெண் ஒருவரை காதலித்துள்ளார்.. அந்த பெண், இவருடைய பாட்டி வீட்டு பக்கத்திலேயே வசிப்பவராம்.. ஒரே இடத்தில் வசிப்பதால், அதன்மூலம் அறிமுகமாகி நெருங்கி பழகி உள்ளார். அந்த பெண்ணும், இவரை காதலித்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததுமே பாட்டி கொந்தளித்தார்..
பாட்டி, ஆண்ட்டி: அந்த பெண்ணிடம் பழகக்கூடாது என்று பாட்டி மயிலம்மாளும், அவரது அத்தை அழகுப்பிரியாவும் குணசீலனை கண்டித்துள்ளார்கள். ஆனால் குணசீலன் கேட்கவில்லை. எனினும், தொடர்ந்து பாட்டியும், ஆண்ட்டியும் அட்வைஸ் செய்து கொண்டேயிருந்ததால் குணசீலன் எரிச்சலடைந்தார். இதனால் பாட்டியை கொன்றுவிட முடிவுசெய்தார்.. இதற்காக தன்னுடைய நண்பர் ரிஷி என்பவரின் உதவியை நாடவும், அவரும் கொலை செய்ய சம்மதித்தார். ரிஷிக்கு 23 வயதாகிறது..
சம்பவத்தன்று இரவு, பாட்டியையும், ஆண்ட்டியையும் கத்தியால் கழுத்தை அறுத்தனர்.. இருவருமே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.. பிறகு ஒரு சாக்கு பையில் 2 சடலத்தையும் போட்டு கட்டி, வீட்டுக்கு பின்பக்கம், பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள இடத்தில் மூட்டையை ஒளித்து வைத்துவிட்டனர்..

மூட்டைகள்: பிறகு மறுநாள் காலையில், குணசீலனின் தாத்தா 2 பேரையும் தேடினார்.. எங்குமே அவர்கள் இல்லை என்பதால், குணசீலனிடம், அவர்கள் எங்கே என்று கேட்டுள்ளார்..
அதற்கு குணசீலன், 2 பேரும் காலையிலேயே கோயிலுக்கு போயிட்டாங்க என்று சொல்லி உள்ளார்.. நீண்ட நேரம் வராததால், தாத்தா கவலையானார்.. பிறகு வேறு ஒரு வேலையாக வீட்டிற்கு பின்பக்கம் போனபோதுதான், பழைய பொருட்கள் வைத்துள்ள இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மூட்டையை பார்த்தார்..
திடீரென மூட்டை இருந்ததால், சந்தேகப்பட்டு, அந்த பையை தாத்தா பிரித்து பார்த்தபோதுதான், மயிலம்மாளும், அழகுப்பிரியாவும் சடலமாக கிடந்ததை கண்டு கதறினார்.

டபுள் மர்டர்: பிறகு உடனடியாக தன்னுடைய மகன் அதாவது குணசீலன் அப்பாவுக்கு தகவல் சொல்லி, பிறகு எஸ்எஸ்காலனி போலீசுக்கும் விஷயத்தை சொன்னார்.. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, குணசீலனையும், நண்பர் ரிஷியையும் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
குணசீலனை வளர்த்ததே இந்த பாட்டி தானாம்.. சில மாதங்களுக்கு முன்புதான், அந்த பெண் அறிமுகமாகி உள்ளார்.. அவருக்காக, பாட்டியையும், அத்தையையும் கொலை செய்யும் அளவுக்கு குணசீலன் சென்றுள்ளது, மதுரையையே அதிர வைத்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications