ஜில் ஜில் ஜிகர்தண்டா.. சூடான கொல்லிமலை காபி! நாமக்கல், மதுரைக்கு அதிர்ஷ்டம்? புவிசார் குறியீடு வருமா
மதுரை: ஒரு பொருளின் தரம், தனித்துவம் மற்றும் நன்மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படக்கூடிய புவிசார் குறியீடு பெற தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த புவிசார் குறியீடு விவசாயம், இயற்கை, கைவினை, உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த தனித்துவமாக உற்பத்தியாகக்கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்ட பாதுகாப்பும் கிடைத்துவிடுகிறது..

புவிசார் பொருட்கள்
அத்துடன் புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுத்துவிட முடியும். இதனால் புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை. மேலும் அப்பகுதியிலுள்ள அனைவருக்குமான உரிமையாகவும் இது கருதப்படுகிறது.
அதற்காக குறிப்பிட்ட ஊர்களில் தயாரிப்பதால் மட்டுமே, அந்த பொருளுக்கான அங்கீகாரம் கிடைத்துவிடாது.. அப்பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை போன்ற எண்ணற்ற விஷயங்கள் ஆவணங்களாக சேகரிக்கப்படும். இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து, மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்..
உலக அங்கீகாரம்
உடனே மத்திய அரசும், அனைத்துவிதமான ஆவணங்களையும் சரிபார்த்து, ஆராய்ந்து அதற்கான குறியீட்டை வழங்கும். அந்தவகையில், தமிழகத்துக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன..
மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, சேலம் சுங்குடி சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு போன்றவை இதுபோன்ற அங்கீகாரத்தை பெற்றவைதான்.
14 புவிசார் குறியீடு
இதனை தவிர, மேலும் 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.. அவைகளில், தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலை பூண்டு, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகிய 4 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நாட்டிலேயே இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது நமக்கு பெருமையை தந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை, மேலும் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில், தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்ய உதவியுள்ளது.
மதுரை ஜிகர்தண்டா
இந்த லிஸ்ட்டில் ஜவ்வாது புளி, வந்தவாசி கோரைப்பாய், கொல்லிமலை காபி, கொல்லிமலை பலாப்பழம், பொள்ளாச்சி தென்னை நார், முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசி, மதுரை அப்பளம், கீழக்கரை தொதல் அல்வா, மதுரை ஜிகர்தண்டா, கன்னியாகுமரி நன்னாரி போன்றவை இடம்பெற்றிருக்கிறதாம்.
இதுகுறித்து தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் சொல்லும்போது, "ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு பாரம்பரிய, தனித்தன்மையான பொருளுக்கு, புவிசார் குறியீடு பெற இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
விளைபொருட்கள்
இப்போது விவசாயம் சார்ந்த பொருட்கள் 10, உணவு மற்றும் பானங்கள் 6, கைத்தறி மற்றும் நெசவு 2, கைவினை மற்றும் அலங்காரப் பொருட்கள் 7 உட்பட மொத்தம் 30 பொருட்களுக்கான விபரங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும், சுயசார்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட பொருட்களுக்கும் புவிசார் அடையாளம் கிடைத்துவிட்டால்,வேலூர், கன்னியாகுமரி, நாமக்கல், மதுரை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உலகப்பெருமை கிடைக்கும் என்பதால் பெருத்த ஆர்வத்துடன், காத்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications