சாதி.. மாணவியிடம் இழிவு பேச்சு.. வன்கொடுமை சட்டத்தில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் கைது.. அதிரடி
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை தரக்குறைவாகவும், சாதி ரீதியாகவும் இழிவுப்படுத்தி பேசிய புகாரில் வரலாற்று துறை பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சாதி ரீதியிலான பிரச்சனைகளை தடுக்கவும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட ஆங்காங்கே சாதியை மையப்படுத்தி தீண்டாமை பிரச்சனைகள் நடக்கின்றன.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட பிரச்சனை மட்டும் இன்னும் முற்றுப்பெறவில்லை. மேலும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களிலும் சாதி ரீதியான பிரச்சனைகள் எழுகின்றன. இந்நிலையில் தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

சாதி சார்ந்து தரக்குறைவாக...
மதுரை பல்கலை நகரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று துறை பேராசிரியராக இரப்பவர் சண்முக ராஜா. இவர் எம்ஏ பயிலும் மாணவி பாரதியை ஒருமையிலும், சாதி சார்ந்து தரம்குறைந்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பேராசிரியர் கைது
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது போராசிரியர் சண்முக ராஜா மீதான புகார் உண்மை தன்மை கொண்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சண்முகராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மாணவிகளிடம் தவறாக..
முன்னதாக போராசிரியர் சண்முகராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்கு முன்பு பல்கலைக்கழக மாணவிகளிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியதும் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி
இந்நிலையில் தான் தற்போது சண்முகராஜா சாதி ரீதியாக மாணவியை துன்புறுத்தி பேசிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications