மதுரையில் அராஜகம்.. காரில் வந்த குடும்பத்தினரை அடித்து சட்டையை கிழித்த டோல்கேட் ஊழியர்கள்.. பரபரப்பு
மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் எடுத்தும் நீண்ட நேரமாக ஒரு காரை நிறுத்தி வைத்திருந்ததை உரிமையாளர் தட்டி கேட்ட நிலையில் அவரை ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விதிகளுக்கு புறம்பாக மதுரை தெப்பலூர் சுங்கச்சாவடி செயல்படுவதாக அப்பகுதி மக்கள் அந்த சுங்கச்சாவடியை நீக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அந்த சுங்கச்சாவடியில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் பிரபு. தற்போது கோடை விடுமுறையையொட்டி திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர் சுற்றுலாவை முடித்துக் கொண்டு காரில் மீண்டும் சென்னை புறப்பட்டனர்.
அப்போது கோவில்பட்டி- விருதுநகர் 4 வழிச்சாலை வழியாக வந்தனர். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் 4 ஆவது பாதையில் இயந்திர கோளாறு காரணமாக சென்னையை சேர்ந்த பிரபுவின் வாகனத்தை 3 ஆவது பாதைக்கு வருமாறு ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது அந்த பாதையில் ஏற்கெனவே நின்றிருந்த வாகனம் பாஸ்ட்டேகில் பணம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. அங்கு பிரபுவின் வாகனம் வந்தது. அப்போது பாஸ்ட்டேக்கில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்னரும் அவரது கார் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு திட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுக்க முயற்சித்த போது பெண் ஊழியர் பிரபுவிடம் வந்து தகாத வார்த்தைகளால் பேசி வாகனத்தை நிறுத்துமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் பிரபு காரில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சுங்கசாவடி ஊழியர்கள் பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காரில் இருந்த குடும்பத்தினர் வந்து தடுத்த போது அவர்களையும் 4 சுங்க சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதுகுறித்து சம்பவத்தை அறிந்த போலீஸார் பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை காரின் பின்புறம் இருந்த மற்றொரு வாகனத்தின் உரிமையாளர் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications