எஸ்எஸ்ஐ செய்த எக்குத்தப்பு வேலை..பாத்ரூமில் பள்ளி சிறுமிக்கு கொடூரம்! திடுக்கிட்ட திருப்பரங்குன்றம்!
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தின் போது கோயில் திருவிழாவிற்கு வந்த 14 வயது சிறுமியை கோயில் கூடுதல் பணிக்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வன்கொடுமை செய்த வழக்கில் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட எஸ்ஐ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழா உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அந்த வகையில் மதுரையில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவிற்கு வந்த 14 வயது சிறுமியை பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வன்கொடுமை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை தீப திருவிழா:
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த எஸ்ஐ பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கார்த்திகை தீபத்தின் பொழுது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதைக்கு வந்திருந்தனர். மலையை சுற்றி கிரிவலம் சென்ற பிறகு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்ததால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் மதுரை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை:
அப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தான் அந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. கார்த்திகை தீப திருநாளில் சம்பவத்தன்று திடீர் நகர் காவல் நிலையத்தை சார்ந்த குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது சாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமி கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் 14 வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பெற்றோர் அதிர்ச்சி:
கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வராததால் கழிவறைக்கு சென்று பார்த்த பெற்றோர் சிறுமி மயங்கிய நிலையில் இருந்ததகைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சைல்ட் லைனில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
எஸ்எஸ்ஐ கைது:
இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், சைல்ட் லைன் அதிகாரிகளும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட குற்றவாளி சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி கழிவறைக்கு சென்ற தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
சஸ்பெண்ட் நடவடிக்கை:
இதை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உதவியாளர் ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications