மதுரை அலங்காநல்லூர் அருகே கணவர் ஓட்டிய லாரி.. நடந்த சிறு தவறு.. மனைவிக்கு எமனாக மாறியது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்த மார்நாடு என்பவர் டிப்பர் லாரி வைத்துள்ளார்.இவரது மனைவி ரெங்காதேவி. டிப்பர் லாரி உரிமையாளர் மார்நாடு, எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு பெருமாள்பட்டிக்கு வந்தார். மணல் லாரியில் இருந்து கொட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்துகிளம்பும் முன்பு, லாரி டயரில் மணல் இருப்பதை ரெங்காதேவி அகற்ற முயன்றார். இதை கவனிக்காத மார்நாடு, மனைவிக்கு எமனாக மாறினார்.

லாரி ஓட்டுநர்கள் சில நேரங்களில் கவனிக்காமல் விட்டால், ஏற்கவே முடியாத மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராவது ஒருவர், தனது ரத்த உறவை இழந்துவிடுவார்.. லாரிகளில் சைடு பார்க்காமல் போனால், அல்லது முன்னாடி வருவோரை கவனிக்காவிட்டால் விபரீதமே ஏற்படும். அதனாலேயே லாரிகள் வேகமாக வரும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஓரமாக செல்கிறார்கள். ஏனெனில் திடீரென இருசக்கர வாகன ஓட்டி பிரேக் பிடித்தால், அதேவேகத்தில் பிரேக் பிடிக்க இயலாது.

Madurai lorry What happened to the wife after the lorry driven by her husband near Alanganallur

லாரிகள் பிரேக் பிடிக்காது

அவர் மீது ஏற்றிவிட வாய்ப்பு உள்ளது. அதேபோல் சிக்னலில் லாரிகள் வேகமாக வருகிற போது, எப்படியாவது சிக்னல் போடுவதற்கு செல்ல வேண்டும் என நிற்காமல் முந்தி செல்ல முயலும் போது, சில இருசக்கர வாகன ஓட்டிகள் கிராஸ் செய்வார்கள். அப்படியான சூழலில் லாரிகள் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை... இதுவும் விபத்திற்கு காரணமாக உள்ளது. லாரி ஓட்டுநர்களின் கவனக்குறைவால் மற்றவர்களுக்கு மட்டுமல்ல..அவர்களின் உறவுகளும் பாதிக்கப்படுவதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படித்தான் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்துள்ளது.

மதுரை அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பெருமாள்பட்டியை சேர்ந்த 45 வயதாகும் மார்நாடு என்பவர் டிப்பர் லாரி உரிமையாளர் ஆவார். இவருடைய மனைவி ரெங்காதேவிக்கு 39 வயது ஆகிறது. இவர்களுக்கு சந்தியாதேவி என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் மார்நாடு தனது லாரியில் எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு பெருமாள்பட்டிக்கு வந்திருக்கிறார். பின்னர் அங்குள்ள மந்தையில் மணலை லாரியில் இருந்து கொட்டியிருக்கிறார். அவரது மனைவி ரெங்காதேவியும் உடன் இருந்தார்.

லாரியில் மணலை அகற்றினார்

லாரியில் இருந்து மண்ணை கொட்டிய பிறகு லாரியின் டயரில் மண் ஒட்டி இருந்தது. இதை பார்த்த ரெங்காதேவி டயரில் இருந்த மண்ணை அகற்றிக்கொண்டிருந்திருக்கிறார். இதை கவனிக்காத மார்நாடு லாரியை பின்னோக்கி இயக்கி உள்ளார். அதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரெங்காதேவி பலத்த காயம் அடைந்து கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அதிர்ச்சி அடைந்த மார்நாடு உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்தபோது தனது மனைவி டயருக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் வழக்கு

பின்னர் அவரை உடனடியாக மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+