மதுரை மாநகராட்சியை அதிர வைத்த ஊழல்.. மேயர் இந்திராணியின் கணவர் கைது! பதவியை ராஜினாமா செய்கிறாரா?
மதுரை: மதுரை மாநகராட்சியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவரது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், உடநலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பொன் வசந்த் கைதை தொடர்ந்து, நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மதுரை மேயர் இந்திராணி தனது பதவியை ரஜினாமா செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் 1480 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 370 கோடி ரூபாய் சொத்து வரி வரவு வந்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக 250 கோடி அளவில் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொத்து வரி கட்டும் கட்டிடங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கு மேல் வணிக கட்டிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 2022 முதல் வணிக நிறுவன கட்டடங்களுக்கு, குடியிருப்பு கட்டிடங்களின் வரியை நிர்ணயம் செய்யப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது புகார் கூறப்பட்டது.

ஊழல் வழக்கு
இந்த ஊழல் தொடர்பாக நெருக்கடி அதிகமான நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், மண்டலம் மூன்றின் தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் ஆய்வாளரான குமரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் திமுக மண்டல தலைவர்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.
திமுக தலைவர்கள்
இதை அடுத்து மண்டலம் மூன்றின் தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம் இரண்டின் தலைவி சரவண புவனேஸ்வரி, மண்டலம் ஐந்தின் தலைவி சுவிதா ஆகியோரிடமும் அவரது கணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மதுரைக்கு வந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேரு மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தினார்.
மதுரை மாநகராட்சி
இந்த விசாரணையில் மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்களான பாண்டி செல்வி, சரவணபவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா, நகரமைப்பு வரி விதிப்பு குழு தலைவர்கள் ஆன மூவேந்திரன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது. புகாருக்குள்ளான அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வற்புறுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் மதுரை மாநகராட்சியின் நான்கு மண்டல தலைவர்களும், 2 குழு தலைவர்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
பொன் வசந்த்
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தியதாக மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதிக அளவு சர்க்கரை இருந்ததும், ரத்த அழுத்தம் இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் மேயர் இந்திராணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என கூறப்படுகிறது. மதுரை மேயர் இந்திராணி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜரின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications