மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கோர் தரிசனம்
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையான சித்திரை திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , சித்திர திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக கோயில் வடக்கு ஆடி வீதி , மேற்கு ஆடி வீதி சந்திப்பில் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரமாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியதை தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியும் , சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருமண சபங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப் பட்டதை தொடர்ந்து , காலை 9 .50 மணிக்கு மேல் முதல் 10 .14 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர் . திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில் உள்ளேயும் , சித்திரை வீதிகளிலும் பெரிய அளவிலான எல்.இ.டி., திரைகள் ஏராளமான இடங்களில் வைக்கப்பட்டு இருந்ததுடன் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் , திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆடி வீதிகள் , சித்திரை வீதிகளில் மொய் காணிக்கை செலுத்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருந்ததுடன் பக்தர்களுக்கு திருமண விருந்தும் வழங்கப்பட்டது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications