மதுரையின் நுரையீரலுக்கே ஆபத்து.. 1200 கோடி நிலம் தனியாருக்கு தாரைவார்ப்பா? அபாயமணி அடிக்கும் சு.வெ!
மதுரை: மதுரையில் சுமார் 1200 கோடி மதிப்பிலான ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.

இந்நிலையில் இப்பொழுது மதுரையில் உள்ள ரயில்வே நிலத்திற்கு ஆபத்து வந்துள்ளது. அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்திற்கும், ரயில்வே காலனியில் உள்ள நிலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்காக தனியாருக்கு வழங்க இந்நிலங்களை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு "ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம்" (RLDA) மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கட்டங்களாக ரயில்வே நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
முதல் கட்டமாக அரசரடி ரயில்வே மைதானம், இதன் அளவு 11.45 ஏக்கர். இரண்டாவது கட்டமாக ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலம். இதன் அளவு 29.16 ஏக்கர். மொத்தம் 40.61 ஏக்கர். இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 1200 கோடி. இவ்வளவு பெரும் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இரயில்வேயின் சொத்து மக்களின் சொத்து, தேசத்தின் சொத்து. அதனை தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க மாட்டோம்.
அரசரடி ரயில்வே மைதானம் மதுரையில் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கிய மைதானம், விளையாட்டு வீரர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நாள் தோறும் பயன்படுத்தும் மைதானம். இந்த மைதானமும், ரயில்வே காலனியும் மதுரையின் மிக முக்கிய பகுதிகளாகும். அதேபோல மதுரை நகரத்திற்குள் சுமார் 1550 மரங்கள் இருக்கிற இடம் ரயில்வே காலனி, இன்னும் கூடுதலாக சொல்வதானால் மதுரையினுடைய நுரையீரல் மதுரை ரயில்வே காலனி.
இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முடிவினை கைவிட இரயில்வே நிர்வாகம் மறுத்தால் இந்த நிலத்தை பாதுகாக்க மதுரை மக்கள் மாபெரும் போராட்ட இயக்கத்தை முன்னெடுப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications