6 மாசம் ஆகியும் வரல.. தமிழ்நாட்டை வஞ்சிப்பதே பாஜக அரசின் 24 மணி நேர வேலை.. சு.வெங்கடேசன் சுளீர்!
மதுரை: மதுரை விமான நிலையம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் என விமானத்துறை அறிவித்தது. ஆனால் இன்று வரை இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் அதன் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி, இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 24*7 விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு இப்போது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரை விமான நிலைய வளர்ச்சியில் மத்திய அரசின் அக்கறையின்மை தொடர்ச்சியாக நீடிக்கிறது. பல அழுத்தங்களுக்கு பிறகுதான் 24×7 என்பதை ஏற்றுக்கொண்டு அறிவித்தார்கள். ஆனால் இன்றைக்கு வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு
இது குறித்து இன்றைய கூட்டத்தில் கவலையோடு விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தென் மாவட்டங்களில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து, அதேபோல மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களையும் இணைத்து மத்திய அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்ற முடிவினை எடுத்துள்ளோம்.
மதுரை மற்றும் தென் மாவட்ட தொழில் வணிக வளர்ச்சிக்கு மதுரை விமான நிலையத்தினுடைய விரிவாக்கம், சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது மிக முக்கியமான நடவடிக்கை. இதற்கு சொத்தை காரணங்களை மீண்டும் மீண்டும் மத்திய அரசு சொல்வது ஏற்க முடியாத ஒன்று. மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகிற உள்நாட்டு பயணிகளுடைய எண்ணிக்கையும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். டொமெஸ்ட்டிக் விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது.
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட பலமடங்கு மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்கிற பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையாக்கப்படவில்லை. இது முழுக்க ஒரு அரசியல் காரணத்துக்காக செய்யப்படுகிற ஒரு வஞ்சகம். அதனால்தான் தொடர்ந்து இவ்வளோ பெரிய ஒரு போராட்டத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications