கைக்குழந்தையுடன் கலங்கி நின்ற பெண்.. ஆன்ஸ்பாட்டில் டோஸ்.. அடம்பிடித்து சாதித்த வெங்கடேசன் எம்பி!
மதுரை: கலங்கிய கண்களுடன் கைகுழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு தனது உதவியால் கண்ணீரை துடைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி வெங்கடேசன். மதுரையில் நீண்ட நாட்களாக விதவை சான்றிதழ் கேட்டு அலைந்த பெண்ணுக்கு அந்த சான்றிதழை அதிகாரிகளிடம் பேசி கிடைக்க செய்தார்.
விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று வெங்கடேசன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

விதவை சான்றிதழ், முதியோர் உதவி தொகை பெற சான்றிதழ் பெறுவதற்கு, பெண்களும், முதியவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்துவிட்டு அலைவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இப்போது மட்டுமல்ல.. பல வருடங்களாக , யார் ஆட்சியில் இருந்தாலும் இது நடந்து வருகிறது.
இதற்கு காரணம் முறையான சான்றிதழ் இணைக்கப்படாதது ஒரு காரணம் என்று அதிகாரிகள் கூறினாலும், இன்னொரு காரணமாக அவர்கள் அதற்கு தகுதியானவர்களா என்று ஆய்வு செய்ய ஆகும் கால அளவும் காரணமாக இருக்கிறது. இதனிடையே லஞ்சமும் முக்கிய காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் ஒரு பெண் ஆறுமாதமாக விதவை சான்றிதழ் வாங்க முடியாமல் கை குழந்தையுடன் அலைந்து கொண்டிருந்திக்கிறார். அவருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் உதவி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார். "விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை" என்று அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.
அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்காமல் முகாமை முடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இரவு 7 மணிக்கு சான்றிதழை கொடுத்து முகாமை முடித்தோம். விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அதிகாரிகள் கடவுள் மனப்பான்மையில் செயல்படுகிறார்கள்.......ஒவ்வொர்துறைக்கும் கால நிர்ணயம் தேவை..... என்று வலியுறுத்தி உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.... ஆதரவற்றோர் விதவைச்சான்று. பட்டா மற்றும் வரன்முறைபட்டா.. ஆண்டுகள் கடந்தும் கிடைக்கவில்லை என்று ஒரு நெட்டிசன் குற்றம்சாட்டினார்.
முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 10, 2023
மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார்.
“விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை” என்று.
அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.
1/2 pic.twitter.com/8XifQf6ibU
கம்யூனிஸ்ட்கள் எப்போதும் எளிய மக்களின் வலி அறிந்தவர்கள் தான் வாழ்த்துக்கள் தோழர் என்று ஒரு நெட்டிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அரசு இயந்திரங்கள் சுயநலத்துடன் செயல்படுவது வருத்தமே என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications