"சூப்பர்வைசருடன் உஷா".. அடித்த கூத்தை பார்த்து அதிர்ந்த கணவர்.. அடுத்து நடந்த அதி பயங்கரம்!
2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
மதுரை: சூப்பர்வைசருடன் உஷா, அடித்த கூத்தை, கணவனால் சகிக்கவே முடியவில்லை.. எவ்வளவு சொல்லியும் உஷா அடங்கவுமில்லை... அதனால் பிள்ளைகளையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்!!
மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியை சேர்ந்தவர்தான் உஷா.. இங்குள்ள பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.. 29 வயசாகிறது.. கணவர் பெயர் குமார்... ஆட்டோ ஓட்டிவந்தார்.. இவர்களுக்கு 8, மற்றும் 6 வயதில்2 மகன்கள் இருந்தனர்.

உஷா வேலை பார்த்த பேரூராட்சியில் தூய்மை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் கனகராஜ் ... இவருடன்தான் உஷாவுக்கு லவ் வந்துவிட்டது.. 46 வயசு கனகராஜுடன் உஷா அளவுக்கு அதிகமாகவே நெருங்கி பழகினார்.. இது குமாருக்கு தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், 2 பேரையும் கூப்பிட்டு எச்சரித்தார்.. ஒரு கட்டத்தில் கெஞ்சினார்.. அப்போதும் 2 பேரும் அடங்கவில்லை.
இதனால் குமார், கனகராஜை கொலை செய்ய முடிவு செய்தார்.. ஆனால் அதற்கான நேரம் அவருக்கு கைகூடவில்லை... ஒவ்வொரு நாளும் மன உளைச்சலிலேயே தவித்து வந்தார்.. கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்து கொண்டு, அதில் இருந்த எல்லா உஷாவின் போட்டோவையும் முகத்தை கத்தியால் கீறி கீறி அழித்தார்.
பிறகு ஒரு அரிவாளை எடுத்து கொண்டு, பேரூராட்சி ஆபீசுக்கு போனார்.. அங்கே வேலை பார்த்து கொண்டிருந்த கனகராஜின் கழுத்தில் வெட்டினார்... ரத்த வெள்ளத்தில் கனகராஜ் கீழே விழுந்தார்... இதை பார்த்ததும் கனகராஜ் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து குமார் தப்பியோடிவிட்டார்.. துடிதுடித்து கொண்டிருந்த கனகராஜை அங்கிருந்தோர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசாரும் குமாரை தேட ஆரம்பித்தனர்.. ஆனால் 2 மகன்களுடன் குமார் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், வெள்ளையம்பட்டி பெரியகுளம் மாடக் கருப்பு கோவிலில், குமாரும், அவரது 2 குழந்தைகளும் விஷம் அருந்திவிட்டு உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசாரும், பொதுமக்களும் அவர்களை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால் தீவிர சிகிச்சை தந்தும், 2 குழந்தைகளுமே இறந்துவிட்டன.. குமாருக்கு இப்போது தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இதனிடையே இது எல்லாத்துக்கும் காரணமான உஷாவை காணவில்லையாம்.. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications