5 ஆண்டுகளாக தாமதம்.. மதுரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய வணிக வளாகம் எப்போது திறப்பு?
மதுரை: மதுரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வளாகம் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் திறந்து வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டிலேயே கட்டடப் பணிகள் முடிவடைந்தாலும், சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்து வைக்கப்படவில்லை. இதனால் மதுரை மக்களிடையே காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை ரயில் நிலையம் அருகே பெரியார் பேருந்து நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் ஆகிய இரு பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வந்தன. உள்ளூர் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், மதுரையின் முக்கிய பேருந்து நிலையமாக உருவெடுத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரு பேருந்து நிலையமும் இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் ரூ.174 கோடியில் பேருந்து நிலையத்துடன் 475 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளன. வெறும் வணிக வளாகமாக மட்டுமல்லாமல், பொழுதுபோக்கு தளமாகவும் கட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மீனாட்சியம்மன் கோயில் அருகில் இருப்பதால், வாகனங்களை நிறுத்துவதற்காக அண்டர் கிரவுண்ட் வாகன பார்க்கிங் உள்ளன.
ஆண்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்
இந்த கடைகள் ஏலம் விட்டு பொதுமக்கள் வரத் தொடங்கினால், மாநகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை. இந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் இன்னும் மின்சாரம் மற்றும் எக்ஸ்கலேட்டர் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
கட்டட அனுமதியில் சிக்கல்
சுமார் 5 ஆண்டுகளாக கட்டுமான பணிகளே முடிவடையாததால், மதுரை மக்களிடையே விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரிக்கையில், மீனாட்சியம்மன் கோயில் உயரத்திற்கு மேல் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. இந்த விதிமுறை காரணமாக வணிக வளாகத்திற்கு கட்டிட வரைப்பட அனுமதி பெறுவதில் சிக்கல் இருந்தது.
மின்சாரம் பெறுவதில் சிக்கல்
அதனை சரி செய்தாலும், மின் இணைப்பு இதுவரை பெறவில்லை. இதுவொரு பக்கம் இருக்க, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாமல் இருக்கிறது. தற்போது வரை 99 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடித்து, உரிய அனுமதி கிடைத்த பின் காம்ப்ளக்ஸ் திறக்கப்படும் என்று கூறி உள்ளனர்.
99% பணிகள் நிறைவு
கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி 18 மாதங்களிலேயே முடிவடைந்துவிட்டது. ஆனால் இதுநாள் வரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய கட்டடம் வெறும் காட்சிப் பொருளாகவே மாறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்பாக திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அப்போதும் திறக்கப்படவில்லை. இதனால் கடையை கொடுத்தவர்கள் தொடர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications