மதுரை தேவர் சிலைக்கு மரியாதை.. தவெக நிர்வாகிகளுக்கு நடந்த பரிதாபம்.. காவல் துறை அதிரடி
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அதில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை தவெகவினர் தேவர் சிலைக்கு மரியாதை சென்றபோது விதிகளை மீறியதாக சொல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாடு விவாதங்களை கிளப்பியுள்ளது. தீபாவளி பண்டிகை பரபரப்புகளை கடந்தும், விஜய்யின் கருத்தால் அரசியல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பசும்பொன் பகுதியில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 61வது குரு பூஜை விழா நடந்து வருகிறது. கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய நிகழ்வில் ஆன்மிக விழா, அரசியல் விழா என்று இரண்டு பிரிவுகளாக குரு பூஜை நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு..க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் தேவர் ஜெயந்தி குறித்து முதலில் தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டார். பிறகு தன் அலுவலகத்தில் தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்க சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தவெக சார்பில் விஜய் மக்கள் இயக்க வடக்கு மாவட்ட தலைவர் அன்பன் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தெப்பக்குளம் சென்று மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தவெகவினர் கட்சித்துண்டுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் வந்துள்ளதாக தெரிகிறது. இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் வர அனுமதியில்லை என காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. தவெகவினர் மருது பாண்டியர் சிலை அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கோரிபாளையம் சென்றனர்.
அவர்கள் மீண்டும் வந்தபோது தவெகவினரின் சுமார் 16 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தவெகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்டுக் கொள்ளுங்கள் என காவல்துறை கூறியது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
இருந்ததும் போச்சே! தவெக கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சி கிரேட் எஸ்கேப்! அதிர்ச்சியில் விஜய் -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
நான் வருவேன்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. சுணங்கி கிடந்த தவெக தலைகளுக்கு.. சர்ப்ரைஸ் தகவல்! -
தவெகவை விடுங்க.. இனி அவரை காப்பாத்துறதே திக்திக்தான்.. விஜய் கேம்பில்.. வெடிக்கும் அடுத்த பூகம்பம் -
பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்? -
விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு! -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications