“சங்கை நெம்பி விட்டேன், துடிச்சிட்டா” வரதட்சணைக்காக தாக்குதல்! காவலர் பூபாலனிடம் தீவிர விசாரணை
மதுரை: மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பூபாலனின் மனைவி, வரதட்சணை கேட்டு தன்னை பூபாலன் தாக்கியதாக புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். தற்போது அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
மதுரை காதகிணறு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பிரியா. இவருக்கும் காவலர் பூபாலனுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், சமீப நாட்களாக வரதட்சணை தொடர்பாக தன் மீது கணவர் பூபாலன் தொடர் தாக்குதல் நடத்துவதாக பிரியா புலம்பி வந்திருக்கிறார்.

சண்டை உச்சத்தை எட்டும்போது, கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் விட்டிருக்கும் சென்றிருக்கிறார். இப்படி இருக்கையில் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயத்துடன் தங்கப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன் தன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.
பூபாலனுக்கு, அவரது தந்தை செந்தில்குமரன், தாய் மற்றும் சகோதரி ஆகியோர் ஆதரவாக இருப்பதாகவும், தன் மீதான தாக்குதல் குறித்த எத்தனை முறை முறையிட்டும் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் தங்கப்பிரியா போலீசுக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பூபாலனை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தலைமறைவானார்.
பூபாலனை கைது செய்ய மதுரை மாவட்ட எஸ்பி 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டிருந்தார். தனது மனைவியை தாக்கியது குறித்து பூபாலன் தனது தங்கையிடடும், தாயிடமும் செல்போனில் பேசியிருக்கிறார். இந்த உரையாடலில், "சங்கை நெம்பி விட்டேன். துடிச்சிட்டா! வாய் பேசினதுக்கு வேணும்" என்று தாக்குதலை நியாப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தை செல்போனில் மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த தங்கை, பூபாலனுக்கு ஆதரவாகவே பேசியிருந்தார். இந்த ஆடியோ சோஷியல் மீடியாக்களில் ஷேராகி கவனம் பெற்றிருந்தது.
இதனையடுத்து காவலர் பூபாலனையும், அவரது தந்தை அதாவது புகார் கொடுத்த தங்கப்பிரியாவின் மாமனார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பூபாலனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இன்று பிற்பகல் திருப்பூர் பூபாலன் பதுங்கியிருந்த நிலையில் அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பூபாலன் அப்பன் திருப்பதி காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அவரிடம் சாந்தி எனும் காவல் அதிகாரி விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். விசாரணை முடிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் பணிபுரிந்த காவல் நிலையத்திற்கு, கைதியாக பூபாலன் அழைத்துவரப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் சொந்த காவல் நிலையத்தில் இவர் மீது விசாரணை நடத்தப்படுவதால் அது நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications