Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் அவர், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

Madurai police Petition seeking permission to interrogate BJP executive SG Surya in police custody

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மைப் பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்' என எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். மேலும், "எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா?

பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியைப் போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே" என சு.வெங்கடேசனை விமர்சித்திருந்தார் எஸ்.ஜி.சூர்யா. இந்த விவகாரம் குறித்து சிபிஐஎம் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி சூர்யாவை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். எஸ்.ஜி.சூர்யா மீது 153 (A), 505 (1) (B), 504, 505(1)(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட எஸ்.ஜி சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் , எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன் உள்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையும் செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனத்தை பதிவு செய்தது.

இதனிடையே மதுரை மத்திய சிறையில் உள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணையை நீதித்துறை நடுவர் பானு இன்றைக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் சூர்யாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவும் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+