மதுரையில் ரூ.2 கோடி பணம் கேட்டு சிறுவன் கடத்தல்.. விரட்டிச் சென்ற போலீஸ்.. சினிமா பாணியில் சம்பவம்!
மதுரை: மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் போலீசார் விரட்டுவதை அறிந்து சிறுவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மதுரையில் சினிமா பாணியில் நடந்த ஆள்கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்ந்து கத்தி முனையில் ஒரு கும்பல் திடீரென கடத்திச் சென்றது.

இதையடுத்து, கடத்தல் கும்பல் அந்த மாணவனின் தாய் மைதிலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் உன் பையனை விடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸுக்கு போனால் உன் மகனை இனிமேல் பார்க்கவே முடியாது என மிரட்டியுள்ளனர்.
எனினும் மைதிலி போலீசை அணுகினார். எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு சென்று தனது மகன் கடத்தப்பட்டதாகவும், அந்த கும்பல் போனில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார் மைதிலி.
மைதிலி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை தேடினர். செல்போன் டவர் மூலமாக கடத்தல் கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்து விரட்டிச் சென்றனர்.
போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அந்த மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலையில் விட்டு விட்டு தப்பிச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை மீட்ட காவல் துறையினர், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் பள்ளி மாணவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளது மதுரை மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரையில் பள்ளி மாணவன் பணத்திற்காக கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications