நம்ம மதுரையா இது.. ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை.. அடையாளம் தெரியாமல் மாறிய ரேஸ்கோர்ஸ் மைதானம்!
மதுரை: ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் இன்னும் 8 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. சர்வதேச தரத்திலான டர்ப் தொடங்கி வீரர்களுக்கான ஓய்வறை, பார்வையாளர்களுக்கான கேலரி, விஐபி கேலரி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.
14வது ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக உலகம் முழுவதும் இருந்து 24 நாடுகள் பங்கேற்கின்றன. இதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

ஏற்கனவே ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர். இதனிடையே மதுரையில் சர்வதேச தரத்தினாலான ஹாக்கி மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மைதானத்தின் அத்தனை பணிகளும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி மைதான அரங்குகள் இருந்தாலும், பார்வையாளர்களுக்கான கேலரி, வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாமல் இருந்தது. தற்போது அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. புதிய டர்ப், உடைமாற்றும் அறை, முதலுதவி அறை, ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி, விஐபி கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக மட்டும் ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன. மதுரையில் இதுவரை 2 முறை தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடந்துள்ளன. முதல்முறையாக சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகள் நடக்க உள்ளதால், ரேஸ்கோர்ஸ் மைதானமே மொத்தமாக மாறி இருக்கிறது. இது மதுரை மாவட்ட விளையாட்டு வீரர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நடப்பதை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் தொடங்கி, விளக்கத்தூண், தெப்பக்குளம் என்று இளைஞர்கள், மாணவர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications