வேலையை காட்டிய ராட்வைலர் நாய்.. ஓனரம்மாவையே பாய்ந்து குதறியெடுத்து.. மதுரை திருமங்கலத்தில் பரபரப்பு
மதுரை: ஆசை ஆசையாக வளர்த்த நாயே, உரிமையாளரை பாய்ந்து கடித்துள்ளது.. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. மதுரை திருமங்கலத்தில் இந்த பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராட்வீலர் நாய் என்பது செர்மனியைச் சேர்ந்த ஒரு வீட்டு நாய் இனமாகும்.. இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது... இதன் மேல் தாடையில் 22, கீழ்தாடையில் 20 என, கத்திரிக்கோல் வடிவில் பல்வரிசை அமைந்திருக்கும்.

நாய்கள்: மற்ற நாய்கள் ஆவேசமாகி கடிக்கும் வேகத்தைவிட, இநத ராட் வைலர் நாய் கடிக்கும் வேகமும் தீவிரமும் அதிகமாகும்.. அதாவது, ராட் வைலர் நாய் கடித்தால், மனிதர்களின் கை எலும்புகளே நொறுங்கி விடுமாம்.. வீட்டில் இதை யார் வளர்க்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் உணவு தர முடியும்.,. தினமும் உணவு தரும் ஒரு உரிமையாளருக்கே இந்த நாய் கட்டுப்படும்... ராட் வைலர் நாய் இனங்கள் மிக மிக மூர்க்கமானவை என்றே கருதப்படுகின்றன.
அன்று ராட்வீலர் நாய்கள், மாடு மேய்க்கும் நாய்களாக பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது மனிதர்களுக்கு பலவகைகளில் உதவுகிறது.. குறிப்பாக, தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.
சென்னை சிறுமி: ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில், 5 வயது சிறுமியை கடித்து குதறிய இந்த இன நாய், ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. இதற்குபிறகுதான், வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
அலறல் சத்தம்: அதாவது, நாய்க்கு அருகே கிடந்த துணியை ஜான்சி எடுக்க முயற்சி செய்தாராம். அப்போதுதான் நாய் பாய்ந்து கடித்து குதறியிருக்கிறது இதனால், வலி தாங்க முடியாமல் ஜான்சி அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டி , ஜான்சிராணியை மீட்டனர். பிறகு உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாய்கள் கடித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.. மதுரை பகுதிகளில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். N.G. மோகன் என்ற நபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நாய் கடி விவரங்களை RTI மூலமாக கேட்டு பெற்றபோது, இந்த தகவல் வெளியாகியிருந்தது.
அதிர்ச்சி: எனவே, மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்து வரும்நிலையில், இன்று வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் நாயே இப்படி கடித்து குதறி வைத்துள்ளது, மதுரைவாசிகளை கதிகலங்க செய்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications