காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு வாண்ணே.. சண்டை போடுவோம்.. போலீஸுக்கு சவால் விடும் ரவுடி ஆடியோ
மதுரை: காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு வாண்ணே , சண்டை போடுவோம் என போலீஸ்காரரை சண்டைக்கு இழுக்கும் ரவுடியின் ஆடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர காவல் துறை சார்பாக காவல் நிலையம் வாரியாக தனிப்படையினர் மற்றும் துணை ஆணையர், ஆணையர் தலைமையில் தனிப்படையினர் என பல்வேறு குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ரவுடிகளின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தனிப்பிரிவு
இந்த நிலையில் மதுரை மாநகர் தனிப் பிரிவில் பணியாற்றும் செந்தில் என்ற காவலரை தொலைபேசி மூலம் அழைத்து பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜேஷ் என்பவர் அதிகாரியை மிரட்டுவது போன்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரவுடி ராஜேஷ்
இது தொடர்பாக தலைமறைவாக உள்ள ரவுடி ராஜேஷை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். காவலரை அலைபேசியில் தொடர்பு கொண்ட பந்தல்குடி ரவுடி ராஜேஷ் கூறியதாவது: "என் கை, கால்களை உடைக்க வேண்டும் என சொன்னயாமே, நீ எங்கே இருக்கேனு சொல்லு.

காக்கி சட்டையை கழட்டி வை
நான் வாரேன், நீ காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு ஆம்பளையா வாண்ணே, சண்டை போடுவோம், நான் வீரன். இன்னும் மூன்று நாளில் பீபிகுளத்தில ஒருவனை கொன்னுடுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

மிரட்டல், தாக்குதல்
பேசியவரை ஏட்டு கண்டிக்க, சரிண்ணே, மன்னிச்சுடு, என்னை சுட்டுக் கொல்லுங்க. உயிரையே வெறுத்துவிட்டேன் என விரக்தி அடைந்து பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் ரவுடிகளின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறியே செல்கிறது. போலீஸாரை மிரட்டுவதும், தாக்குவதும், சவால் விடுவதும் தொடர்கதையா கி வருகிறது.

தேடும் பணிகள் தீவிரம்
போலீஸுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவி வருகிறது. எனவே ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். சவால் விட்ட மதுரை ரவுடி ராஜேஷை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் அவர் ஒரு கொலையை செய்வதற்குள் அவரை பிடிக்க தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications