மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் எவ்வளவு முடிவடைந்துள்ளது? ஆர்வத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள்!
மதுரை: மதுரையில் ரூ.500 கோடியில் கட்டப்பட்டும் வரும் டைடல் பார்க் கட்டுமான பணிகள் எந்த அளவிற்கு முடிவடைந்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. மதுரையில் தொழில்துறை மாற்றத்தில் முக்கிய பங்காக டைடல் பார்க் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் கவனமும் தென் மாவட்டங்களை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தி இருக்கும் நிலையில், பாஜக தரப்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இதன்பின் அடுத்ததாக தவெக தரப்பில் எலியார்பத்தியில் விஜய் தலைமையில் மாநாடு நடக்கவுள்ளது.

அதற்கான பணிகளில் தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை மாவட்டத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதேபோல் மதுரை மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு, பொங்கல் முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் இனி தோப்பூரில் வகுப்புகளில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம், கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றைக் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மதுரை டைடல் பார்க் பணிகள் விரைவுபடுத்தப்படாதது விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
2022ஆம் ஆண்டு மதுரை டைடல் பார்க் அறிவிப்பு வெளியாகியது. அந்த அறிவிப்பின் போதே மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அனைத்து அனுமதிகளையும் பெற்று கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு 3 ஆண்டுகளாகிவிட்டது. இதனால் இளைஞர்கள் பலரும் டைடல் பார்க் பணிகள் மீது விமர்சனம் வைக்க தொடங்கினர்.
திமுக ஆட்சி முடிவதற்கு டைடல் பார்க் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மதுரை டைடல் பார்க் பணிகள் இப்போதுதான் வேகம் எடுத்துள்ளன. தரைதளம் அமைக்கப்பட்டு, தற்போது முதல் தள கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மொத்தமாக 9.97 ஏக்கர் நிலத்தில் அமையும் டைடல் பார்க், ரூ.500 கோடியில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் அமைக்கப்படவுள்ளது.
இதனால் டைடல் பார்க் கட்டுமான பணிகள் முடிவடைய இன்னும் ஓராண்டு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டைடல் பார்க் எப்படி அமையும் என்ற மினியேச்சர் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த டைடல் பார்க்கில் சர்வதேச நிறுவனங்கள் தங்களது கிளையை தொடங்க அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications