காரில் ஏறி ரகளை செய்தால் கைது.. வாகனங்கள் வீடியோவில் கண்காணிக்கப்படும்- மதுரை எஸ்பி அதிரடி வார்னிங்!
மதுரை : தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறினால் பறிமுதல் செய்யப்படும் என மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை, மருதுபாண்டியர்கள் நினைவு நாள், இமானுவேல் சேகரன் நினைவு நாள் போன்ற நிகழ்வுகளின்போது கார்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் செல்வது வழக்கம்.
அப்போது, கார்களின் மேல் முன்புறம் பானட்டில் அமர்ந்துகொண்டும், கதவுகளில் தொங்கியபடியும் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், தேவர் குருபூஜை, மருது சகோதரர்கள் நினைவிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படும் என்றும் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.

31 பேர் மீது நடவடிக்கை
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், "செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறியது தொடர்பாக மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விதி மீறினால் பறிமுதல்
நாளை (அக்டோபர் 27) மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலுக்கும், தேவர் ஜெயந்தி - குருபூஜையையொட்டி வரும் அக்டோபர் 29, 30ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கும் சொந்த கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வோம்.

கைது - பறிமுதல்
சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும். செல்லும் வழியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் பரிசோதிக்கப்படும். விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனே விடுவிக்கப்படமாட்டாது. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

கார்களில் ஏறி நின்றால் கைது
இதன்மூலம் பண விரயம், நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உருவாகும். வீதிமீறலை கண்டறிய மதுரை மாவட்ட எல்லைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்படும். காவல்துறையினர் மூலம் வீடியோ எடுக்கப்படும். அரசு, காவல்துறையினர் வாகனங்களில் ஏறி நின்று ரகளை செய்வோர் கைது செய்யப்படுவர். இது போன்ற நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேட்ரோல்
ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தலா 2 கண்காணிப்பு வாகனங்கள் வழங்கப்பட்டு, அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் கண்காணிக்கப்படும். மாவட்டம் முழுவதும் பட்டாலியன், உள்ளூர் போலீஸார் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துகிறோம். அனுமதி பெற்ற வாகனங்கள் எவ்வித வீதிமீறலும் இன்றி முறையாக சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு காவல்துறையினருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications