கல்விக் கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி.. ரூ.1 லட்சத்தை இழந்த மாணவி தற்கொலை.. மதுரையில் சோகம்!
மதுரை: பேஷன் டெக்னாலஜி படிப்பதற்காக வங்கிக் கடனுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை தெப்பக்குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தாரணி (19). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். சட்டம் பயில விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐகேட் என்ற பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தார்.
கல்விக் கட்டணம் 6 லட்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க தாரணி முடிவு செய்தார். கல்லூரி நிர்வாகமும் அதற்கான சான்றிதழை தாரணிக்கு அனுப்பியது.

தாரணி வீட்டில்
அதனடிப்படையில் அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக தாரணி 30 ஆயிரம் ரூபாய் சேர்க்கைக் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டும் என கூறி அவ்வப்போது தாரணி வீட்டிலிருந்து பெற்றோரிடம் பணம் வாங்கியுள்ளார்.

தாய்
அவ்வாறு அவர் மொத்தமாக ரூ 1.04 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது தாயிடம் மேலும் 23 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பணத்தை அனுப்பினார் தாரணி. இந்த நிலையில் தாரணியின் தாய் செல்வராணி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றார்.

இளம் பெண் தற்கொலை
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது தாரணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸாருக்கு செல்வராணி தகவல் கொடுத்துள்ளார். மதுரை தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகீர் கிளப்பும் எஸ்எம்எஸ்
தாரணியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் அதில் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தாரணியின் செல்போனுக்கு கடைசியாக வந்த எஸ்எம்எஸ்ஸில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் பெயரில் ரூ 26 ஆயிரம் செலுத்தும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் தான் தாரணி ஒரு லட்சத்தை இழந்தாரா? அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications