எங்கெங்கும் மாணவர் போராட்டம்.. பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது
Recommended Video

மதுரை: பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கிறது மாணவர்கள் போராட்டம். பல்வேறு கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருவதால் கல்லூரிகள் நடைபெறுவது சிக்கலாகியுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்தும், பொள்ளாச்சி வழக்கினை சிறப்பு நீதிமன்றம் அமைத்து பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் தலையீடு இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டத்தின் போது குற்றவாளிகளுக்கு எதிராகவும், அரசு , காவல்துறையினருக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரிகளை சேர்ந்த இளநிலை, முதுநிலை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து மதுரையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போராட்டத்தை தடுக்கும் வகையில் போலிசார் நூற்றுக்கணக்காணோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அரசியல் தலையீடு இன்றி விசாரணை நடைபெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஹாஸ்டலையும் மாணவர்கள் காலி செய்யுமாறு வலியுறுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications