மதுரையில் வரலாறு மாறுகிறது.. வருகிறது டைடல் பார்க்.. வேகமெடுத்த பணிகள்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. கிட்டத்தட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க போகிறதாம்.. மதுரை டைடல் பார்க் கட்டிடம் எப்போது திறக்கப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா, முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

மதுரையில் டைடல் பார்க் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்று அன்றைய நிதியமைச்சர் பட்ஜெட் கூட்டத்தின்போது கூறியிருந்தார்.. இந்த அறிவிப்பையடுத்து, மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக டைடல் பார்க் அமைய உள்ளது..

madurai tidal park it park trb raja

மதுரை டைடல் பார்க்: இதில் முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரிலும், பிறகு 2ம் கட்டமாக மேலும் 5 ஏக்கரிலும் டைடல் பார்க் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.. மொத்தம் 10 ஏக்கரில் மதுரை டைடல் பார்க் திட்டம் அமையவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் துவங்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 5.63 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது... மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு அருகே கீழ்தளத்தளத்துடன் 12 தளங்களுடன் இந்த கட்டிடம் அமைகிறது. இதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், பிளம்பிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து இ-டெண்டர் விடப்பட்டது.

தென்மாவட்டம்:
கலாச்சாரம், பண்பாட்டு தலைநகரான மதுரை, தொழில் துறையில் பின்தங்கியிருப்பதால் இந்த டைடல் பார்க் திட்டம் ஒரு கனவு திட்டமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. இந்த டைடல் பார்க் நிறுவப்பட்டுவிட்டால், தென் மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, டைடல் பார்க் திட்டத்தை தொடர்ந்து இதனை சார்ந்த மற்ற தொழில் வாய்ப்புகளும் வர வாய்ப்புள்ளதால் மதுரை தொழில் துறையிலும் பிற நகரங்களைபோலவே மிகப்பெரிய வளர்ச்சியை பெறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், டைடல் பார்க் அமைக்கும் பணிகள் துரிதமாகியிருக்கின்றன.. இந்த டைடல் பார்க் அமைய உளள இடத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரிலும் ஆய்வு செய்திருக்கிறார்.

நில எடுப்பு: இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா, "12 தளங்கள், 60 மீட்டர் உயரத்தில் டைடல் பார்க் அமைய உள்ளது.. இதற்கான நிலஎடு்ப்பு எடுப்பு, டெண்டர் பணிகள் நிறைவடைந்து விட்டது.. விரைவில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும், வரும் 2026 ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதனால் மேலும் பல திட்டங்களுடன் மதுரையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.இந்த டைடல் பார்க் கட்டிடம், தென் தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும். டெண்டருக்கான இறுதிப்பணிகள் நடக்கும் நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திறப்பு: மதுரையில் சிப்காட் தொழிற் பூங்காவும் விரைவில் அமைய உள்ளது. அதற்கான நில எடுப்பு பணிகள் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 250 ஏக்கர் நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. மேலும் நிலம் தேவைப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+