சரி கார்த்தி.. கடல்ல குளிச்சிட்டு ஜெபம் பண்றேன்.. ஏசு, மாதா-க்கு கண்தெரிந்தால்.. வேற யாரு திவ்யாதான்
Recommended Video
மதுரை: "கடைசியா இன்னைக்கு நான் உனக்காக ஜெபம் பண்ண போறேன்.. இதோ இந்த கடல்ல குளிச்சுட்டு ஜெபம் பண்றேன்.. அந்த ஏசு, மாதாவுக்கு கண் தெரிந்தால், என்கிட்ட நீ வந்து பேசிடுவே. அப்படி நீ பேசலேன்னா என் மரணம்தான் ஒரு தீர்வை கொடுக்கணும்.. ஸோ.. கார்த்தி ஐ லவ் யூ.. என் மனசுல நீ இருப்பே சரியா.. செத்துட்டாலும் என் இதயத்துல உன்னை தவிர வேற யாரையும் நினைக்கவும் மாட்டேன்.. ஐ லவ்யூ" என்று காதலனை தேடும் டிக்டாக் திவ்யாவின் வீடியோ இணையத்தில் ரவுண்டு அடிக்கிறது.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்.. இவரிடம் காதல் வலையில் திவ்யா என்ற இளம்பெண் ஒருவர் விழுந்துள்ளார். இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர்.. எம்எஸ்சி பட்டதாரியும்கூட.. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்.. அதனால் அவரும் திவ்யாவை காதலித்தார்.
திவ்யா அஜித் ரசிகை.. கார்த்திக் விஜய் ரசிகர்.. இந்த மோதல்தான் காதலாக ஆரம்பமானது.. இருவருமே காதலின் உச்சத்தில் இருந்தனர்.. அப்போது திடீரென திவ்யா டிக்டாக்கில் ஆபாச, கிளாமர் டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது... இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் காதலையும் முறித்து கொண்டுள்ளார்.. மேலும் காதலியை பார்ப்பதும், பேசுவதையும் தவிர்த்துள்ளார்.

நம்பிக்கை
இது டிக்டாக் திவ்யாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. காதலனிடம் பேச பலவகையில் முயன்றும் தோற்று போனார்.. காதலன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. அதனால் தற்கொலையே செய்து கொள்ளலாமா என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.. ஆனாலும் தன் காதலன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார்... அதனால்தான் அன்று முதல் இப்போது வரை பல, பல வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு காதலனை திவ்யா தேடி வருகிறார்.

தற்கொலை
ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து கொண்டு, சாகபோறேன் என்று வீடியோ பதிவிட்டவர், இன்னொரு வீடியோவில் நேரடியாக கடற்கரைக்கே போய்விட்டார் திவ்யா.. பீச்சில் நின்று கொண்டு, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.. கார்த்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடலில் குளித்துவிட்டு மாதாவிடம் ஜெபம் செய்வது போன்றும், குளித்த பின்பு குளிரில் நடுங்கியபடியேயும் மற்றொரு வீடியோ பதிவிட்டார்.. இப்படியே பல பல வீடியோக்களை பதிவிட்டு காதலனை தன்னிடம் வந்துவிடும்படி அழைத்து வருகிறார்.. ஆனால் காதலன்தான் இன்னும் வரவில்லை.

லவ் ஃபெயிலியர்
கடலில் குளிப்பதற்கு முன்பு திவ்யா வீடியோவில் பேசியதாவது: "வீட்டை விட்டு வந்து இத்தனை நாள் ஆச்சு.. எல்லாரும் ஹெல்ப் பண்றோம்.. ஹெல்ப் பண்றோம்னு சொல்லிட்டுதான் இருக்கீங்க.. ஆனால் யாருமே எனக்கு ஹெல்ப் பண்ணல.. என்னால தனியா போராட முடியல.. நின்னு என்னால ஜெயிக்க முடியல... சரி, நான் ஒத்துக்கறேன், எனக்கு லவ் ஃபெயிலியர்தான்.

ஜெபம்
நான் தோத்துட்டேன்தான், கார்த்தி நீதான்டா ஜெயிச்சுட்டே.. ஒரு பொண்ணு வந்து இவ்ளோ தூரம் நிக்கறேன், சாப்பிட்டேனா, சாப்பிடலையான்னுகூட நீ கேக்கல.. நீ ஜெயிச்சுட்டே.. கடைசியா இன்னைக்கு நான் உனக்காக ஜெபம் பண்ண போறேன்.. இதோ இந்த கடல்ல குளிச்சுட்டு ஜெபம் பண்றேன்.. அந்த ஏசு, மாதாவுக்கு கண் தெரிந்தால், என்கிட்ட நீ வந்து பேசிடுவே.

ஐ லவ்யூ
அப்படி நீ பேசலேன்னா என் மரணம்தான் ஒரு தீர்வை கொடுக்கணும்.. அதுக்கும் நான் தயார் ஆயிட்டேன்.. ஸோ.. கார்த்தி ஐ லவ் யூ.. என் மனசுல நீ இருப்பே சரியா.. என்னைக்கும் உன்னை மறக்கவே மாட்டேன்.. உன்னை வெறுக்கவும் மாட்டேன்.. உன்னை நினைக்காம இருக்கவும் மாட்டேன்.. செத்துட்டாலும் என் இதயத்துல உன்னை தவிர வேற யாரையும் நினைக்கவும் மாட்டேன்.. ஐ லவ்யூ" என்கிறார்.
இப்படி பல வீடியோக்களை திவ்யா பதிவிட்டு வருகிறார்.. ஆனால் காதலன்தான் இன்னும் வரவில்லை!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications