மதுரை- பெங்களூர் ரூட்! 6 மணி நேரத்தில் சீறி பாயும் வந்தே பாரத் ரயில்! இன்று தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையிலிருந்து பெங்களூர் வரை இயக்கப்பட உள்ள, வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

மதுரை- பெங்களூர் வரை வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.15 மணிக்கு இயக்கப்படுகிறது. இது திண்டுக்கல்லுக்கு அதிகாலை 5.58 மணிக்கு செல்லும். காலை 6 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 7.10 மணிக்கு திருச்சிக்கும், பின்னர் 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 8.18 மணிக்கு கரூரை சென்றடையும்.

vande bharat bangalore madurai

அங்கிருந்து 2 நிமிடங்கள் காத்திருப்புக்கு பிறகு 8.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூர் செல்லும். அது போல் பெங்களூரிலிருந்து அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வரும். ஆரஞ்ச் நிறத்தில் மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

எங்கெங்கு நிற்கும்: திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக மதுரை- பெங்களூர் வந்தே பாரத் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் வந்தே பாரத் ரயில் மூலம் மதுரை, திருச்சி, சேலம் பயணிகளும் விரைவாக பெங்களூரு சென்றடைய முடியும்.

பயண நேரம்: மதுரை- பெங்களூருக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயண நேரம் 7 மணி நேரம் ஆகிறது. ஆனால் வந்தே பாரத்தில் 6 மணி நேரம்தான் ஆகும். வந்தே பாரத் ரயில் முதலில் 16 பெட்டிகள் அல்லது 8 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இதில் எக்சிகியூட்டிவ் மற்றும் சேர் கார் ஆகிய இரு பெட்டிகள் இருக்கும். 435 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரயிலில் பயணிக்க ஏசி சேர் காரில் 1300 ரூபாயும் எக்சிகியூட்டிவ் கோச்சில் 2300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?: அதன்படி மதுரை- பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் வரும் 20ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதுவரை தமிழகத்தில் சென்னை டூ மைசூர், சென்னை -நெல்லை, சென்னை- நாகர்கோவில், சென்னை- விஜயவாடா, சென்னை- கோவை, கோவை டூ பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலிருந்து பெங்களூர் செல்ல போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் வந்தே பாரத் ரயில் மக்களுக்கு பயனளிக்கும் என தெரிகிறது.

மோடி துவக்கி வைக்கிறார்: ஜூன் 20ஆம் தேதியான இன்று பிரதமர் நரேந்திர மோடி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை- பெங்களூர் ஆகிய இரு ரயில் சேவைகளை காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.

முன்னதாக வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலப்பாளையம் - திருநெல்வேலி மற்றும் குமரி மக்களின் நீண்ட ஆண்டு ஆசையான ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் இடையே நிறைவடைந்த இரட்டை ரயில் பாதை திட்டத்தையும், நாகர்கோவில் டவுன் - நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி இடையே முடிக்கப்பட்ட இரட்டை ரயில்பாதை திட்டத்தையும் நேரில் வந்து நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் 17 ஆம் தேதி தொடங்கி நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+