மதுரை டூ கொல்லம்.. கண்ணாடி கூரையா? அசத்தும் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன்.. தென் மாவட்டமே குஷி
மதுரை: தென் மாவட்டமே, பெரு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறது.. என்ன காரணம் தெரியுமா? மதுரை - கொல்லம் இடையே கண்ணாடி கூரை ரயில் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது..!!
தமிழகம், கேரளா இந்த 2 மாநிலங்களுக்கு இடையே கோயம்புத்தூர் - பாலக்காடு, செங்கோட்டை - புனலூர், நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஆகிய ரயில் வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, கோயம்புத்தூர் - பாலக்காடு, நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்திலும் நிறைய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், செங்கோட்டை - புனலூர் வழித்தடத்தில் வெறும் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.. அதாவது, சென்னை - கொல்லம், மதுரை - குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் 2 முறையும் இயக்கப்படுகின்றன...
செங்கோட்டை: இயற்கை எழில் கொஞ்சும் மலை ரயில் பாதைகளில் செங்கோட்டை - புனலூர் ரயில் பாதை முக்கியமானதாகும்... காரணம், இந்தியாவிலுள்ள ரயில் பாதைகளிலேயே, மிகவும் குறைவான வேகத்தில் அதாவது 30 கிலோ மீட்டருக்கு ரயில் இயக்கப்படுவது இங்குதான்..
மொத்தம் 49 கி.மீ. தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் 6 குகைகள், 50-க்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. இந்த வழியாக செல்லும்போது மலைச்சரிவுகளும், பள்ளத்தாக்குகளும் பயணிகளின் கண்களுக்கு விருந்தாகின்றன.. இதைத்தவிர, கழுத்துருட்டி 13 கண் பாலம் உட்பட சிறிய மற்றும் பெரிய அளவிலான 200 பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.
பயன்பாடுகள்: 1902-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த ரயில் பாதையில் முதலில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதாம்.. அதற்கு பிறகுதான், 1904-ல் பயணிகள் ரயில் இயக்குவதற்காக சோதனை செய்யப்பட்டது. அப்போதுதான், பாதை அதிக வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருந்தது தெரியவந்தது. அதனால், அதிக வேகத்தில் சென்றால் ரயிலை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்கு பிறகு, ரயிலின் 2 இன்ஜின்களையும் இணைத்து, 14 பெட்டிகளுடன் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள் ரயிலை இயக்க அனுமதி தரப்பட்டது.. மேடான பகுதிகளில் ரயிலின் வேகம் அதிகமாகவும், தாழ்வான பகுதிகளில் வேகத்தை குறைத்தும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.. ஆக 2 இன்ஜின்களுடன், 14 பெட்டிகளுடன், 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன,.
ரயில்வே ஸ்டேஷன்: இந்நிலையில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மதுரை - கொல்லம் ரயில் வழித்தடத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர் ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது..
பல இடங்களில் தண்டவாள வளைவுகளும், ஏற்ற, இறக்கமான தண்டவாளங்களும் இப்போது சரி செய்யப்பட்டு விட்டன. பலவீனமான தண்டவாளங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.. இதுநாள் வரை, கூடுதல் பெட்டிகளுடன் கூடிய ரயில்களை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், தற்போது, 22 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஓட்டம் மதுரையில் இருந்து கொல்லம் வரை கடந்த 2 நாட்களும் நடைபெற்று முடிந்துள்ளது.
கண்ணாடி கூரை: கண்ணாடி கூரை கொண்ட "விஸ்டோடோம்" என்ற சுற்றுலா பயணியருக்கான பெட்டி ஒன்றும் கூடுதலாக இதில் இணைக்கப்பட்டிருந்தது ஹைலைட்டான விஷயமாகும்..
இந்த சோதனை வெற்றி அடைந்தபிறகு, 18 முதல் 22 பெட்டிகளை கொண்ட ரயில்களை மதுரை - கொல்லம் இடையே இயக்க முடியும் என்றும் கூடுதல் பயணியர் செல்ல முடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தகவலானது, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications