மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை வட்டார காய்கறி,பழ விவசாயிகளுக்கு குட்நியூஸ்- அமிர்தா ரயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்க பரிந்துரை!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை- திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் அமிர்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்தில் நிற்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளதாக மதுரை எம்,.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மதுரை சுற்றுவட்டார காய்கறி, பழ விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டு செல்வது எளிதாகும் என்பது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு செய்துள்ளதாவது: தெற்கு இரயில்வேயின் மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. கோட்ட துணைப் பொது மேலாளர் கோபிநாத் மாலய்யா கலந்து கொண்டார். புதிய இரயில்கள், ரயில் தட மேம்பாடு, ரயில் நிலையங்களின் மேம்பாடு, பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். இதில் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது மகிழ்வை அளிக்கிற செய்தி.

'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!

தேஜஸ் ரயில் சென்னை செல்லும் போதும், சென்னையில் இருந்து திரும்பும் போதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதற்கு அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்கான ஒப்புதலுக்காக இரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரத்தில் நிற்க போகும் அமிர்தா ரயில்

ஒட்டன்சத்திரத்தில் நிற்க போகும் அமிர்தா ரயில்

மதுரை - திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் அமிர்தா விரைவு இரயிலை காய்கறி, பழ விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரினோம். அதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு பரிந்துரையை செய்துள்ளது தென்னக இரயில்வே. இது மிக முக்கியமான வெற்றி.

தேனி டூ சென்னை ரயில்

தேனி டூ சென்னை ரயில்

மதுரை- போடி- தேனி- வழியாக சென்னை செல்லும் வகையில் ரயில்வே தடம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அந்த கோரிக்கையில் மிக முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. 20601 / 20602 எண் கொண்ட வாரத்திற்கு மூன்றுமுறை இயங்கும் ரயிலுக்கான கோரிக்கை ஏற்கப்பட்டு ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்யசபா எம்.பியும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பொதுமேலாளர் பொறுப்பு கோபிநாத் மால்யாவிடம் 20 கோரிக்கைகள் விண்ணப்பம் அளித்தார்.

பெரியார் பஸ் நிலையம் டூ ரயில் நிலையம்

பெரியார் பஸ் நிலையம் டூ ரயில் நிலையம்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை ரயில் சந்திப்பிற்கும் பெரியார் பேருந்து நிலையத்திற்கும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரை ரயில் சந்திப்பின் முதலாவது நடைமேடையிலிருந்து கீழ்தளச் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான துவக்கநிலை முயற்சியாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்த கூட்டமும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம்

மதுரை ரயில் நிலையத்தில் மீன் சின்னம்

மதுரை இரயில் நிலையச் சந்திப்பில் மீன் சின்னத்தை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டோம். இன்று நடைபெற்ற இரயில்வே ஆய்வுக்கூட்டத்தில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சீசன் வழங்கிட நடவடிக்கை எடுக்க கோரினோம். மீண்டும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில்வே திட்டங்கள்

புதிய ரயில்வே திட்டங்கள்

மதுரை - மேலூர் - காரைக்குடி வழித்தடத்தில் புதிய இரயில் திட்டத்தினை அறிவிக்கக் கோரினோம். அதற்கு பதில் அளித்துள்ள இரயில்வே அந்த திட்டத்திற்கான புதிய வழித்தடம் 85.7 கி.மீ என ஆய்வு செய்யப்பட்டு அதற்கான திட்டமதிப்பாக ரூ.649.5 கோடியாக கணக்கிட்டு 27/11/2014 அன்றே இரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. ஆனால் அந்தத் திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் ரயில்வே வாரியம் நிலுவையில் வைத்துள்ளது. அதே போல காரைக்குடி - திண்டுக்கல் - நத்தம் வழியிலான புதிய வழித்தடமும் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பாக ரூ1314.29 கோடி கணக்கிடப்பட்டு கடந்த 06/07/2015 அன்றே ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவையெல்லாம் மதுரை மக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்கள். இந்தத் திட்டங்களை துவங்கிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

English summary
Souther Railway take steps for Madurai to Trivandrum Amritha express to stop at Oddanchatram Station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X