திருப்பதி லட்டு விடுங்க.. மதுரை உசிலம்பட்டி லட்டை பாருங்க.. மூக்கனுக்கு குஷி.. மகிழ்ச்சியில் மக்கள்
மதுரை: மதுரை உசிலம்பட்டியில் விநாயகர் லட்டு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதேபோல, மூக்கன் என்பவரும் படு குஷியில் காணப்படுகிறார்.. மதுரை உசிலம்பட்டி பிள்ளையார் சதுர்த்தி நிகழ்வுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தேசம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது... வழக்கமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளில் லட்டுக்களை ஏலம் விடுவது வழக்கமாகும்.. அதாவது, பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் கடைசி நாளில் விநாயகர் லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்...

இந்த ஏலத்தில் விடப்படும் லட்டுக்களை வாங்குவதில் பலரும் போட்டி போடுவார்கள்.. ஏனென்றால், லட்டை ஏலம் எடுப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த வழக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளது.
தெலுங்கானா: இப்படித்தான், கடந்த வருடம் தெலுங்கானா ஹைதராபாத்தின் புறநகர்ப்பகுதியான பந்தலகுடாவில் உள்ள விநாயகர் லட்டு ஏலம் எடுக்கப்பட்டது பலரது ஆச்சரியத்தையும் பெற்றிருந்தது.. காரணம், சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போனது. அதற்கு முந்தைய வருடம் லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம்போன நிலையில், கடந்த முறை டபுள் மடங்காக ஏலம் எடுத்துவிட்டார்கள்.
அந்தவகையில், நம்முடைய தமிழகத்தில் இந்த வருடம் மதுரை மாவட்டத்தில் விநாயகர் லட்டு நல்ல விலைக்கு ஏலம் போயிருக்கிறது. மதுரை மாவட்டம் முழுவதும் சிறப்பாக பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா சைஸ் கொழுக்கட்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடந்திருந்தன.
விநாயகர் லட்டு: இதில், உசிலம்பட்டி அருகே, நடத்தப்பட்ட விநாயகர் பூஜையில், விநாயகர் லட்டு ஏலம் விடப்பட்டது.. அதன்படி, ஒரே ஒரு லட்டு 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் போயிருக்கிறது..
பொதுவாக, விநாயகர் கையில் லட்டு இருப்பது போல பொம்மைகள் செய்வார்கள்.. ஆனால், உசிலம்பட்டியில் ஒருபடிமேலே போய், நிஜமாகவே விநாயகர் கையில் லட்டை தந்துவிட்டார்கள்.. ஒரிஜினல் லட்டை கையில்பிடித்தபடி விநாயகர் உட்கார்ந்திருக்க, சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தன.. இறுதியில், அருகிலிருக்கும் கண்மாய் கரைக்கு ஊர்வலமாக சிலை எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை: முன்னதாக, சிலையை கரைப்பதற்கு முன்பு, கிராம மக்கள் இந்த விநாயகர் லட்டுவை ஏலம் விட்டனர். விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட இந்த ஒரு லட்டு 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.. மூக்கன் என்பவர் இந்த மெகா லட்டை ஏலம் எடுத்தார்.. ஏலத்தில் கிடைத்த இந்த லட்டை அங்கிருந்த கிராம மக்கள் அனைவருமே பகிர்ந்து சாப்பிட்டனர்..
இதனால் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும்போன கிராம மக்கள், இனிமேல் ஒவ்வொரு வருடமும் இதே போல, விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் என்றும், இந்த வருடம் ஏலம் எடுத்த மூக்கனுக்கு, அடுத்த வருடம் 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்...
மூக்கன் குஷி: லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம். பிள்ளையார் சதுர்த்தி முடிந்து 2 நாள் ஆகியும், செம குஷியில் காணப்படுகிறார் உசிலம்பட்டி மூக்கன்..!!












Click it and Unblock the Notifications