அப்படியே குலுங்கிய மதுரை.. அலறிய டோல்கேட் ஊழியர்கள்.. தெறித்து ஓடிய மக்கள்.. வண்டியூரில் ஷாக்
மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட்டில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இருக்கும் முக்கியமான டோல்கேட் பகுதிகளில் வண்டியூர் ஒன்றாகும். விருதுநகர், வேலம்மாள் கல்லூரி, மேலூர் பகுதிகளுக்கு செல்ல பலர் இந்த டோல்கேட்டை பயன்படுத்துவது வழக்கம்.

தினமும் 30 ஆயிரம் வாகனங்களுக்கும் அதிகமாக இந்த டோல்கேட் வழியே கடந்து செல்கின்றன. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சற்று நேரத்திற்கு முன் அங்கே அதிக வேகத்தில் லாரி ஒன்று வந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி வந்த லேனில் வாகனங்கள் எதுவும் அந்த கேட்டில் இல்லை.
வேகமாக வந்த லாரி அப்படியே நிற்காமல் டோல் கேட்டில் மோதி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக வந்து அந்த டோல் கேட்டில் லாரி மோதி உள்ளது. லாரி பிரேக் பிடிக்காமல் தறிகெட்ட வேகத்தில் வந்து மோதியதாக கூறப்படுகிறது.
வேகமாக வந்து அப்படியே ஒரு பக்கம் சாய்ந்து டோல் கேட்டில் கலெக்ஷன் செய்யும் நபர் அமரும் இடத்தில் மோதி அதையும் தாண்டி பறந்து சென்றுள்ளது. இதில் அந்த கட்டுமானம் பகுதி அப்படியே இடிந்து உள்ளது. அந்த லாரி 80 கிமீ வேகத்தை தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து முன்னாள் சென்ற வாகனங்கள் 2ன் மீது லாரியின் பாகங்கள், சுங்கச்சாவடி பாகங்கள் பறந்து போய் விழுந்தன.
இதனால் மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் சுங்கச்சாவடி ஊழியரான சதீஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரிடம் போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த டோல்கேட் தற்காலிகமாக திறந்து விடப்பட்டு உள்ளது. விபத்து நடந்த லேன் மட்டும் மூடப்பட்டு மற்ற பகுதிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications