பட்டா மாறுதலில்.. மதுரையில் தலைகுனிந்த விஏஓ.. தென்காசி மூக்கை துளைத்த "கொய்யா பணம்".. நம்பவே முடியல
மதுரை: மதுரையில் அரசு ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்கி கைதாவது பெருகி வருகிறது.. தென்காசி நகராட்சியில், டெண்டர் வைப்புத் தொகையில் சமீபத்தில்தான் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தார்.. பிறகு 2 நாட்களுக்கு முன்பு, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தார்.. இந்நிலையில், மதுரையில் ஒரு பெண் அதிகாரி சிக்கியிருக்கிறார்.. என்ன நடந்தது?
தமிழ்நாட்டின் அரசு துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் அப்பட்டமாக அசிங்கப்பட்டு, கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. இதில், பெண் அதிகாரிகளும் அடிக்கடி கைதாவது கவலையை தந்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்புகூட தென்காசி பெண் போலீஸ் அதிகாரி கைதாகியிருந்தார்.

தென்காசி செல்வக்குமார்
அதாவது, நெல்லை பணகுடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் ஸ்டேசனில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற செல்வ குமார், கடையம் போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியபோது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா சொன்னாராம்.
கொய்யாப்பழம் வாசனை
லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தரவும், அவர்களின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்துடன் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் சென்றுள்ளார்..
ஆனால், அந்த ரூபாய் நோட்டுக்களை அப்படியே கொண்டு செல்லாமல் அன்பளிப்பாக பழம் தருவதை போல, வெளியே தெரியாமல் இருக்க, வாசணை வீசும் கொய்யாப்பழம், பணம் அடங்கிய பையோடு கடையம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றாராம் செல்வக்குமார்,., அந்த பணத்தை பெண் அதிகாரி கைநீட்டி வாங்கியபோதுதான் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.
மதுரை விஏஓ
இதோ இன்று இன்னொரு பெண் அதிகாரி மதுரையில் கைதாகியிருக்கிறார்.. மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மலைச்செல்வம். இவர் தன்னுடைய அப்பா ராமு பெயரில் உள்ள இடத்தை பட்டா மாறுதல் செய்ய கச்சிராயன்பட்டி விஏஓ துரைப்பாண்டியிடம் மனு கொடுத்தார். மனுவை பரிசீலனை செய்த விஏஓ, பட்டா மாறுதலுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். 7,000 தருவதாக மலைச்செல்வம் ஒப்புக்கொண்டார். லஞ்ச விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார்.
போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 7,000 ரூபாயை விஏஓ துரைப்பாண்டியின் தனிப்பட்ட உதவியாளர் சுந்தர்ராஜபுரம் பாக்கியலட்சுமியிடம் மலைச்செல்வம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் துரைப்பாண்டி, பாக்கியலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கைதாவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன் பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி ஓயாமல் பொதுவெளியில் அசிங்கப்பட்டு கொண்டிருப்பது, பொதுமக்களுக்கு கவலையை உண்டுபண்ணி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications