மனைவியின் கள்ளக்காதல்.. அதுக்கு கணவன் ஏன் இப்படி செய்யணும்? மதுரையில் "வேலி தாண்டிய வெள்ளாடு".. பாவம்
மதுரை: மதுரையில் தாய், தகப்பன் இருவருமே இல்லாமல், 3 ஆண் குழந்தைகள் கண்ணீரில் தவித்து வருகின்றன.. தாயின் கள்ளக்காதலால், நடந்த இந்த சம்பவம் மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது ஒரு கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 35 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வயதாகிறது..

காதல் மணம்: இவர்கள் 2 பேருமே 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர்கள்.. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். 3 குழந்தைகளுமே, பாலமேட்டிலுள்ள பள்ளியில்தான் படித்து வருகிறார்கள். எனவே, பாலமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்த மணிவண்ணன், கடினமாக உழைத்து, இன்று சொந்தமாகவே கால் டாக்ஸி வாங்கி அதன் உரிமையாளராக இருக்கிறார். மனைவி செல்வி, பாலமேடு பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்...
தகாத உறவு: இந்நிலையில், செல்வியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தென்பட துவங்கியது.. சில ஆண்களுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது... குறிப்பாக, பெட்ரோல் பங்கில்தான், பல்வேறு ஆண் நண்பர்கள் செல்விக்கு கிடைத்துள்ளனர்.. இவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.. இந்த விஷயம் கணவர் மணிவண்ணனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால், மனைவியை கண்டித்தார்.. அடிக்கடி புத்தி சொல்லியும் வந்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் கால் டாக்ஸி டிரைவராக வேலைக்கு சேர வேண்டிய நிலைமை மணிவண்ணனுக்கு ஏற்பட்டது.
கள்ளக்காதல்: இதன்காரணமாக, 15 நாட்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வந்து போக முடிந்தது.. இதுதான் மனைவி செல்விக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.. கண்டிக்க ஆளில்லாமல் தன் விருப்பப்படி வாழ்ந்து வந்துள்ளார்.. கடந்த சனிக்கிழமையன்று, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் வீட்டை விட்டே செல்வி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது..
இதைக்கேள்விப்பட்டு துடிதுடித்து போன மணிவண்ணன், உடனடியாக பாலமேடு திரும்பினார்.. மனைவியை காணாமல் எங்கெங்கோ தேடினார்.. பிறகு பாலமேடு போலீசிலும் இதுகுறித்து புகார் தந்தார்.. போலீசாரும், இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்த நிலையில், விசாரணையில் தாமதப்படுத்தியதாக தெரிகிறது. எனவே, மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, மனைவியை சீக்கிரமாக கண்டுபிடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மணிவண்ணன்: எனினும், மனைவி ஓடிப்போனதால் அதிர்ச்சியில் இருந்த மீள முடியாத மணிவண்ணன், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதால், தற்கொலை முயற்சியை எடுத்தார்.. பாலமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.. அவரின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்களும், போலீசாரும் விரைந்து வந்து அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.. கள்ளக்காதலனோடு அம்மா ஓடிப்போன நிலையில், அப்பாவும் தீக்குளித்து இறந்துவிட்டதால், அந்த 3 குழந்தைகளும் தாய் தந்தையரின்றி கதறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications