ஒரு பக்கம் ராஜேஷ்.. மறுபக்கம் யோகேஷ்.. நடுவில் சிக்கிக் கொண்ட "கனி".. தீராமல் தொடரும் ஜிம் காதல்!
மதுரை இளம்பெண் கண்ணீருடன் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்
மதுரை: ஒரு பக்கம் ராஜேஷ்.. மறுபக்கம் யோகேஷ்.. நடுவில் சிக்கி கொண்டு கண்ணீருடன் கதறி வருகிறார் கனிமொழி!
மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ்.. 26 வயதாகிறது.. மதுரை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.. இவர் கனிமொழி என்ற பெண்ணை காதலித்தார்.. 3 வருஷங்களுக்கு முன்பு கல்யாணமும் செய்து கொண்டனர்.
ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.. அதனால், மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு 2 பேரும் சென்றனர்.. அப்போது செக்கப் செய்து பார்த்ததில், கனிமொழி வயிற்றில் நீர்க்கட்டி இருப்பது தெரிய வந்தது. அதனால், உடற்பயிற்சி செய்தார், கர்ப்பப்பையில் உள்ள நீர்கட்டியை குறையும் என்று டாக்டர்கள் அட்வைஸ் தந்துள்ளனர்.

கனிமொழி
அதன்படியே, வில்லாபுரத்தில் உள்ள ஒரு ஜிம்மில் கனிமொழியை ராஜேஷ் சேர்த்துள்ளார்... ஜிம்முக்கு போன இடத்தில் மாஸ்டர் யோகேஷ் கண்ணாவுக்கும் கனிமொழிக்கும் காதல் பற்றி கொண்டுவிட்டது.. ஒருகட்டத்தில் யோகேஷ் இல்லாமல் கனிமொழியால் வாழவே முடியாது என்ற நிலைமையும் வந்துவிட்டது.. எப்படியாவது யோகேஷூடன் சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளார்.

யோகேஷ்
ஆனால் இதற்கு குறுக்கே ராஜேஷ் இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். அப்போதுதான் நண்பர்களுடன் வந்த யோகேஷ், ராஜேஷை தாக்கிவிட்டு, கனிமொழியையும் இழுத்து கொண்டு ஓடிவிட்டதாக தெரிகிறது.. இதையடுத்து, திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இதையெல்லாம் குறிப்பிட்டு ராஜேஷ் புகார் தந்துள்ளார். இதையடுத்து போலீசார் கனிமொழி, ராஜேஷ், யோகேஷை அழைத்து விசாரித்தனர்..

காப்பகம்
அப்போது கனிமொழி, "ராஜேஷ் என்னை அடிச்சு துன்புறுத்துகிறார், எப்படியாவது என்னை காப்பாற்றும்படி யோகேஷ்கிட்ட சொன்னேன்.. அவர் என்னை அடிச்சதால்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்... அப்போது எனக்கு யோகேஷ் உதவியாக இருந்தார்... ராஜேஷிடம் இருந்து என்னை மீட்டு ஒரு ஹோமிலும் சேர்த்தார். இப்போது வரை நான் இந்த ஹோமில்தான் தங்கி இருக்கிறேன்.. எனக்கு ராஜேஷ்கூட வாழ பிடிக்கல.. டைவர்ஸ் வாங்கி தந்துடுங்க" என்று போலீசில் கனிமொழி கூறினார். இதையடுத்து போலீசார் கனிமொழியை நரிமேடு பகுதியில் தங்கியிருந்த ஹோமுக்கே அனுப்பி வைத்தனர்.

கண்ணீர் வீடியோ
இதனிடையே, ராஜேஷ் சொல்வது சுத்த பொய் என்று குற்றஞ்சாட்டுகிறார் கனிமொழி.. இது சம்பந்தமாக ஒரு கண்ணீர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.. அதில், " நானும், ஜிம் மாஸ்டர் யோகேஷூம் நெருங்கி பழகி வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாக ராஜேஷ் தவறான புகாரை கொடுத்துள்ளார்.. என் போட்டோவையும் வெளியிட்டு எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த விட்டார்.

சர்ட்டிபிகேட்கள்
இப்போது வரை நான் இந்த ஹோமில்தான் தங்கி இருக்கிறேன்.. எனக்குன்னு யாரும் இல்லை.. கவர்ன்மென்ட் வேலைக்கு நான் எக்ஸாம் எழுதணும்னு இருக்கேன்.. ஆனால், அதுக்கான சர்டிபிகேட்டுகள் என்கிட்ட இல்லை.. ராஜேஷ் என்கிட்ட அதை தர மறுக்கிறார்.. என்னை என் பெற்றோரும் ஏத்துக்க மறுக்கறாங்க.. நான் இனிமேல் என்ன செய்வேன்" என்று கதறி அழுகிறார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications