காவேரி அம்மாளை கழுத்தில் குத்திய காதர்ஷா.. பரணில் ஏறி பதுங்கல்.. நீண்ட நேர தேடுதலில் சிக்கினார்!
பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் கைது செய்தனர்
மதுரை: காவேரி அம்மாளின் கழுத்தை அறுத்த காதர்ஷா-வுக்கு என்ன செய்வதென்றே ஒருகணம் தெரியவில்லை.. அதனால் தரதரவென கிச்சனுக்கு அந்த அம்மாளை இழுத்து சென்று.. கியாஸ் சிலிண்டரையும் திறந்துவிட்டு.. பரண் மீது ஏறி ஒளிந்தும்கொண்டு.. கடைசியில் வசமாக அகப்பட்டு கொண்டார்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதி துரைராஜ் காவேரி அம்மாள். காவேரி அம்மாளுக்கு 55 வயதாகிறது. இழுத்து இழுத்து பார்த்தும் நகை வராததால், ஆத்திரமடைந்த காதர்ஷா, கையில் தயாராக எடுத்து வந்த கத்தியால் காவேரி அம்மாவின் கை, முதுகு என பல இடங்களில் சரமாரி குத்தினார், அவரது கழுத்தையும் கத்தியால் அறுத்தார்.

இதில் வலி தாங்க முடியாமல் காவேரி அம்மாள் அலறவும், அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு வந்தனர். ஒட்டுமொத்தமாக எல்லாரும் ஓடிவருவதை பார்த்து பதறி போன காதர்ஷா, ரத்தம் வெளியேறி துடித்து கொண்டிருந்த காவேரி அம்மாளை தரதரவென கிச்சனுக்கு இழுத்து சென்றார்.. அங்கு கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு, தீ வைத்து தப்பிக்கவும் முயன்றார்.
ஆனால், அதற்குள் பொதுமக்கள் வீட்டை சுற்றி வளைத்து கொண்டனர். அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல், யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்று பரணில் ஏறி பதுங்கிக் கொண்டார் காதர்ஷா! அதற்குள் தகவல் அறிந்த திருமங்கலம் போலீசாரும் வந்துவிட்டனர். முதல் வேலையாக, ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த காவேரி அம்மாளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்கு பிறகு வீட்டிற்குள் காதர்ஷாவை தேட ஆரம்பித்தனர்.. ரொம்ப நேரமாக அவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.. பிறகுதான் பரண் மீது ஒளிந்து கொண்டிருந்த காதர்ஷாவை கண்டுபிடித்து கைது செய்தனர். இப்போது இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications