அவனை விட்டுடு வேணாம்.. கேட்காத மனைவி.. சிலிண்டரை வெடிக்க வைத்து குழந்தைகளுடன் கணவர் தற்கொலை!
குடும்ப தகராறு காரணமாக சிலிண்டர் வெடிக்க செய்து 2 பேர் பலியானார்கள்
மதுரை: அவனை விட்டுடு.. விட்டுடுன்னு பலமுறை சொல்லியும் கீதா கேட்கல.. கடைசியில் ஆவேசம் அடைந்த கணவன், டீக்கடை சிலிண்டரை திறந்துவிட்டு.. 2 குழந்தைகளுடன் சேர்த்து தீ வைத்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதி கருப்பையா - கீதா. இவர்களுக்கு 7 வயதில் ஹேமலதா என்ற மகளும், 6 வயதில் பிரதீபா என்ற மகளும் உள்ளனர்.
கருப்பையா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கீதா வீட்டிற்கு எதிரே ஒரு டீக்கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இதில் கீதாவுக்கு ஆனந்த் என்பவருடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இதை அறிந்த கருப்பையா மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆனால் கீதா கேட்கவில்லை.

சண்டை
பலமுறை இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் திரும்பவும் 4 நாளைக்கு முன்பு சண்டை வந்துள்ளது. இதில் கோபம் அடைந்த கீதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டார். அதன்பிறகு வரவும் இல்லை என்கிறார்கள்.

லன்ச் டைம்
அந்த 4 நாட்களும் குழந்தைகளை கருப்பையாதான் கவனித்து வந்துள்ளார். ஏற்கனவே வேதனையில் இருந்த கருப்பையா இப்போது மனம் உடைந்து, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் தனக்கு பிறகு அந்த குழந்தைகளின் கதி என்னாகும் என்று கண்ணீர் வடித்தார். அதனால், நேராக ஸ்கூலுக்கு போய் லஞ்ச் பிரேக்கில் 2 மகள்களை அழைத்து கொண்டு டீக்கடைக்கு சென்றார்.

மண்ணெண்ணெய்
அப்பா கூப்பிட்டதும் குழந்தைகளும் அவர் பின்னாடியே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றியுள்ளார். பிறகு கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு வெடிக்க செய்துவிட்டார் கருப்பையா. சிலிண்டர் வெடித்து சிதறியதில் கருப்பையாவும் மூத்த மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

ஹேமலதா
படுகாயங்களுடன் ஹேம லதா போராடினாள். அவளை மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 50 சதவீதம் உடல் எரிந்துள்ளது.. எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து டீக்கடையில் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால், இன்னும் கீதாவை காணோம்.. எங்கே சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications