Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலி.. கடனை திருப்பி கொடுக்காததால் கொலை செய்த கள்ளக்காதலன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகே கொடுத்த பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் கள்ளகாதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சாக்கு மூடையில் கட்டி குப்பையில் வீசிய கள்ளகாதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    காட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலி.. கடனை திருப்பி கொடுக்காததால் கொலை செய்த கள்ளக்காதலன்! - வீடியோ

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற அடையாளம் தெரியாமல் போலீசார் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் போலீஸாரின் துரித விசாரணையில் இறந்த பெண் வாடிப்பட்டி அருகே உள்ள சி. புதூரை சேர்ந்த பெண் தமிழ் செல்வி (31) என்பது தெரியவந்தது. இறந்த தமிழ்செல்வியின் கணவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    ரூ 80 ஆயிரம் கடன்

    ரூ 80 ஆயிரம் கடன்

    அதன்பிறகு தமிழ்செல்விக்கு வீடு கட்டுவதற்காக ரூ.80 ஆயிரத்தை வாடிப்பட்டியை சேர்ந்த மைக்செட் ஆபரேட்டராக பணிபுரியும் லட்சுமணன் என்பவரிடம் கடனாக பெற்றுள்ளார். அதன் பின் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளகாதலாக மாறியுள்ளது.

    காட்டுப் பகுதி

    காட்டுப் பகுதி

    அடிக்கடி இருவரும் தனிமையில் காட்டுபகுதிக்குள் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கொடுத்த பணத்தை தமிழ்ச்செல்வியிடம் திருப்பி கேட்டு வந்துள்ளார் லட்சுமணன். ஆனால் தமிழ்செல்வியோ பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    வாய்த்தகராறு

    வாய்த்தகராறு

    இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் தமிழ்செல்வியை வழக்கம்போல் காட்டு பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். அப்போது மீண்டும் தமிழ்செல்வியிடம் லட்சுமணன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    தமிழ்ச்செல்வி

    தமிழ்ச்செல்வி

    பின்னர் ஆத்திரமடைந்த லட்சுமணன், தமிழ்செல்வியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாக்கு மூடையில் கட்டி குப்பையில் வீசி சென்றது தெரியவந்தது. லட்சுமணனை கைது செய்த வாடிப்பட்டி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+